இந்திய பார் கவுன்சில் தீர்மானங்களை நிறைவேற்றக்கோரி : சென்னையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர் சமுதாய நலன் தொடர்பாக இந்திய பார் கவுன்சில் கொண்டு வந்துள்ள தீர்மானங்களை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய பார் கவுன்சில் நிறைவேற்றிய வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதி உயர்வு, இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை, நீதிமன்றங்களில் உட்கட்டமைப்பு வசதி மேம்பாடு, சங்க நூலகத்திற்கு புத்தகங்களுக்கு நிதி ஒதுக்குவது, பட்ஜெட் தாக்கலின் போது வழக்கறிஞர்களுக்காக 5000 கோடி ரூபாய் ஒதுக்குவது, அனைத்து மாநில வழக்கறிஞர்களுக்கும் வீடுகள் ஒதுக்குவது போன்ற தீர்மானங்களை நிறைவேற்றக் கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி சென்னையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் கட்டிடம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய பார் கவுன்சில் இணைத்தலைவர் பிரபாகரன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன், பெண் வழக்கறிஞர் சங்கத் தலைவர் நளினி, லா அசோசியேஷன் தலைவர் செங்குட்டுவன், தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் முன்னாள் தலைவர் செல்வம், முன்னாள் துணை தலைவர் அமல்ராஜ், மூத்த வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர். பிரசாத், அறிவழகன், பார் கவுன்சிலுக்கு தேர்வாகியுள்ள உறுப்பினர்கள் கே.பாலு, வேல்முருகன், பிரிசில்லா பாண்டியன் உள்ளிட்ட பலர் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மேற்கண்ட இந்தக் கோரிக்கைகளை வழக்கறிஞர்கள் குழு ஆளுநர் ,தமிழக சட்ட அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து  அளிக்க உள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top