மத்திய அரசு வஞ்சிக்கிறது; காவிரி நீர் கிடைக்க உத்தரவாதம் இல்லை: மூத்த தலைவர் நல்லகண்ணு

தமிழ்நாடு விவசாயிகள் சங்க 26-வது மாநில மாநாடு சேலம் தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் நேற்று தொடங்கியது. மாநாட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

விவசாய கடன்களை தள்ளுபடி செய்யாமல் மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதாக அறிவித்திருப்பது, போலித்தனமானது. 5 மாநில தேர்தலில் ஏற்பட்டதுதான் மக்களவைத் தேர்தலிலும் பாஜகவுக்கு ஏற்படும்.

தமிழகத்தில் பாஜகவை மக்கள் முழுமையாக புறக்கணிப்பார்கள். மத்திய அரசைப் போலவே, மாநில அரசும் விவசாயிகளுக்கு எதிரான நிலையை கடைபிடித்து வருகிறது. விவசாயிகளின் பிரச்சினை தட்டிக்கழிக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் புயல் பாதிப்பு மற்றும் வறட்சி நிவாரணத்தை முழுமையாக வழங்கவில்லை.

கஜா புயல் பாதிப்பால், தமிழகம் 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது. புயல் பாதிப்புக்கான நிவாரண நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற தமிழக அரசு தவறிவிட்டது. மத்திய அரசுக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்பட்டு, விவசாயிகளை வஞ்சிக்கிறது.

காவிரி ஆணையத்துக்காக தமிழகம் 25 ஆண்டு போராட்டம் நடத்தி உத்தரவு பெற்றும், காவிரி நீர் கிடைக்க உத்தரவாதம் இல்லை என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top