மு.க.ஸ்டாலினுடன் முகேஷ் அம்பானி சந்திப்பு;தமிழக அரசியலில் பரபரப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி நேரில் சந்தித்து, தனது மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.இவர்களது சந்திப்பு தமிழக அரசியலில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் முகேஷ் அம்பானி நேற்று மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். தனது மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழை தனது மனைவி நீடா அம்பானியுடன் இணைந்து அவர் ஸ்டாலினிடம் வழங்கினார். அப்போது துர்கா ஸ்டாலினும் உடனிருந்தார்.

இந்த சந்திப்பு சாதாரணமான சந்திப்பாக இருந்தாலும் தற்போது பாஜக வுக்கும் ஆர்எஸ்எஸ் க்கும் நடக்கும் பனிப்போர் சண்டையில் முக்கியமானதாக பார்க்கவேண்டியதிருக்கிறது. ஆர்எஸ்எஸ் மோடிக்கு பதிலாக வேறு நபரை தயார் செய்கிறது.இந்த முறை மோடி அலை ஓய்ந்து விட்டதால் தங்களுடைய பிரதான கோரிக்கையான ராமர்கோவில் பிரச்சனையைக் கூட கையில் எடுக்காமல் அடுத்த ஆட்சியில் யாரை கொண்டுவருவது என்பதில் மும்மரமாக இருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ் சின் அடுத்த குறி பிரதான மாநில கட்சிகளை ஒன்றிணைப்பது.இதுவரை எதிர்த்து வந்த கட்சியானாலும் நட்பு பாராட்டுவது அதன் மூலம் தங்களுக்கான எதிர்ப்பை நீர்த்துபோகச்செய்வது,அடுத்த ஐந்து ஆண்டுகளில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க ஆற்றலோடு திரும்பவேண்டும் என்பதுதான்.

இந்த சூழலில்  திமுக தலைவர் மு.க.ஸ்டான், ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி சந்திப்பு திமுக வை பாதிக்காமல் இருந்தால் சரி


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top