பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு மோடிக்கு கருப்புக்கொடி!திருப்பூர் பாஜக எச்ராஜா மீது கடும் கோபம்!!

மோடியின் கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில் கோடிஸ்வரர்கள் எண்ணிக்கை 35% உயர்ந்துள்ளது; அல்லது ஒருநாளைக்கு 2,200 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது; அதேநேரம் 13.6 கோடி இந்தியர்கள் கடன்களிலேயே தங்கள் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள் என்று ஆக்ஸ்பாம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இவ்வளவு மோசமான ஆட்சியை நடத்தும் மோடியே தமிழகத்திற்குள் நுழையாதே திரும்பிப் போ! என்றும்

45 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு இந்தியாவில் கடந்த நான்கரை ஆண்டுகளில் வேலையில்லா திட்டாட்டம் அதிகரித்திருக்கிறது என்ற புள்ளிவிபரத்தை வெளியிட இருந்த தேசிய புள்ளியியல் ஆணைய -என்.எஸ்.சி. (NSC) செயல் தலைவர் பி.சி. மோகனன் அவர்களை மிரட்டி அறிக்கையை வெளியிடவிடாமல் தடுத்ததோடு, அவருக்கு அழுத்தம் கொடுத்து பதவியை இராஜினாமாவும் செய்யவைத்த மத்திய பிஜேபி மோடி அரசு தமிழகத்திற்குள் நுழையாதே திரும்பிப் போ! என்றும்

விவசாயிகள் தற்கொலை குறித்த அறிக்கையை தேசிய குற்ற ஆவணப் பணியகம் (NCRB) மத்திய அரசுக்கு அளித்துள்ளது. ஆனால், இதை வெளியிடாமல் மறைக்கும் பிஜேபியின் மோடியே தமிழகத்திற்குள் நுழையாதே திரும்பிப் போ!என்றும்

2014-2015 காலகட்டத்தில் வெளியிட்டிருக்க வேண்டிய மிகவும் பிற்படுத்தபட்ட மக்களின் சமூக பொருளாதார ஆய்வை இன்னும் வெளியிடாமல் உயர்சாதிகளுக்கு 10% இடஓதுக்கீட்டை வழங்கியிருக்கிற மோடியே தமிழகத்திற்குள் நுழையாதே திரும்பிப் போ!என்றும்

கடந்த நான்கு ஆண்டுகளில் ஆசிரியர் பயிற்சிக்கான நிதியை 87% குறைந்துள்ளது இந்த மோடி அரசு; அதாவது, 2014-15ஆம் ஆண்டில் ரூ.1,158 கோடியாக இருந்தது, 2019-20ஆம் ஆண்டில் ரூ.150 கோடியாக குறைத்திருக்கிறது. இதன் மூலம் அரசு பள்ளிகளுக்கு தரமான ஆசிரியர்கள் உருவாவதை தடுத்து அரசு பள்ளிகளை மூட நினைக்கும் மோடியே தமிழகத்திற்குள் நுழையாதே திரும்பி போ! என்றும்

இன்னும் எண்ணற்ற காரணங்களைச் சொல்லி மோடியின் தமிழக வருகையை எதிர்த்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்  10-02-2019  திருப்பூரில் நடத்தப்பட்டது.

இதில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும், பெரும் திரளான தோழர்களும் கலந்து கொண்டு மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடியுடன் #GobackModi என்று முழக்கங்களை எழுப்பினர்.

 #GobackModi என்கிற வாசகம் போன முறை போல் இந்த முறையும் இந்திய அளவில் முதல் இடத்திலும் உலகளவில் ஆறாவது இடத்திலும் ட்விட்டரில் ட்ரண்டில் தொடர்ந்து இருந்தது.  கூட்டத்தில்  பாஜக கொடி கிழித்தெறியப்பட்டது. கருப்பு பலூன்கள் பறக்க விடப்பட்டன.

இதில், திராவிடர் விடுதலை இயக்கம் தலைவர்  குளத்தூர் மணி ,தந்தை பெரியார் திராவிட கழகம் தலைவர் கோவை ராமகிருஸ்ணன், மே பதினேழு இயக்கம் ஒருகினைப்பாளர் திருமுருகன் காந்தி , தமிழ்ப் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியை சேர்ந்த குடந்தை அரசன்,தமிழர் விடியல் கட்சியை சேர்ந்த  ஒருங்கிணைப்பாளர் டைசன் சுற்றுச்சூழல் போராளி முகிலன் மற்றும் பெரியாரிய உணர்வாளர்கள் ஆயிரக்கணக்கில் கலந்துகொண்டு தமிழகத்தை வஞ்சிக்கும் மோடியே திரும்பி போ என முழக்கமிட்டனர். பின்பு காவல்துறையால் கைது செய்யப்பட்டு கல்யாண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்

திருப்பூருக்கு வந்து போராட்டத்தை நடத்திப் பாருங்கள் என்று சவால்விட்ட    எச்.ராஜா மீது  பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் தலைமைக்கு புகார் பட்டியல் கொடுத்து இருக்கிறார்கள். சும்மா இருந்த பெரியாரிய உணர்வாளர்களை தூண்டி விட்டு இவர் எங்கோ போய் ஒளிந்து விட்டார். திருப்பூர் மாவட்ட பாஜாக வுக்கு அவமானத்தை தேடி தந்திருக்கிறார், இனி எச்.ராஜா திருப்பூருக்கு வரக்கூடாது!  என தலைமைக்கு புகார் அளித்திருப்பதாக திருப்பூர் பாஜக உறுப்பினர் ஒருவர் நம்மிடையே கூறினார்.

கருப்பு சட்டைகளின் போராட்டம் மிரட்டலைக் கொடுத்திருக்கிறது மட்டுமின்றி மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசும் போது ‘பாஜக’ வோடு கூட்டணி வைக்கும் எந்த கட்சியையும் மன்னிக்க மாட்டோம்,பாஜக எப்படி தமிழர் விரோத கட்சியோ அதுபோல அதுவோடு கூட்டணி போடும் கட்சியும் தமிழர் விரோதக் கட்சியே என்பதில் சந்தேகமில்லை! அவர்களையும் தமிழர்களே தனிமை படுத்துங்கள்! என விளாசினார்.

இது பாஜக கூட்டணியில் சேர நினைக்கும் சில கட்சிகளுக்கு சின்ன சலனத்தை ஏற்படுத்தி இருக்கிறது  ஆகையால் தான் இன்னும் பாஜக கூட்டணி முடிவாகவில்லை.அதிமுக ‘பாஜக’ வை அலைக்கழிக்கிறது.’பாமக’ மதில்மேல் பூனையாக நிற்கிறது.என்ன நடக்குமோ பொறுத்திருந்து பார்ப்போம்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top