திருப்பூரில் மோடிக்கு வைகோ தலைமையில் கருப்புக்கொடி போராட்டம்! அனல் உரை!!


பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் ரெயில் நிலையம் அருகே பிரமாண்டமாக வைகோ தலைமையில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்பட்டது.

திருப்பூரில் நடைபெறும் விழாவில், சென்னை டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை இடையேயான மெட்ரோ ரெயில் போக்குவரத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க நேற்று வந்தார் அத்துடன் புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். இதற்கான விழா திருப்பூர் பெருமாநல்லூரில் நடைப்பெற்றது

மேலும் சென்னை கே.கே.நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள 470 படுக்கைகளுடன் கூடிய இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி கட்டிடத்தையும், எண்ணூர் கடற்கரையில் உள்ள (பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்) பி.பி.சி.எல். முனையத்தையும், சென்னை துறைமுகத்தில் இருந்து மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு (சி.பி.சி.எல்.) குழாய் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் திட்டத்தையும் நாட்டுக்கு அர்ப்பணித்து சென்றதாக சொல்லப்படுகிறது

அத்துடன் திருப்பூரில் புதிதாக கட்டப்பட இருக்கும் 100 படுக்கைகளுடன் கூடிய இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கும், சென்னை விமானநிலையத்தை மேம்படுத்தி நவீனப்படுத்தும் திட்டத்துக்கும், திருச்சி விமானநிலையத்தில் புதிதாக கட்டப்பட இருக்கும் ஒருங்கிணைந்த கட்டிடத்துக்கும் மோடி அடிக்கல் நாட்டிச் சென்றார்

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை ராஜாங்க மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், சபாநாயகர் பி.தனபால் மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

இந்த நிலையில், பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் ரெயில் நிலையம் அருகே ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நேற்று  போராட்டம் நடத்தப்பட்டது.  அவர்கள் மோடிக்கு எதிராக கருப்பு கொடிகளை காட்டியபடி கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.  ஆனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை.  இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்துறை பாஜக பெண் ஒருவரை போராட்டக் களத்தில் அனுப்பி   இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பாக பேச அனுமதித்தனர். அதனால் அங்கு காவல்துறையால் சிறிது பதட்டம் நிலவியது   

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல செய்ய போலீசார் முயற்சித்தனர்.  ஆனால் போராட்டக்காரர்கள் தொடர்ந்து தங்களது போராட்டத்தினை தொடர்ந்தனர்.  எதிர்ப்பு கோஷங்களையும் எழுப்பியபடி இருந்தனர்.

இதனிடையே போராட்டம் தொடரவும் , காவல்துறை குறுக்கீடு இல்லாமல் இருக்கவும் ,  தொடர்ந்து அனுமதி வழங்க வலியுறுத்தி டிரான்ஸ்ஃபார்மர் மீது ஏறி ம.தி.மு.க. தொண்டர் ஒருவர் கோஷமிட்டபடியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top