பீகாரில் வந்தே மாதரம் பாடவில்லை எனக்கூறி முஸ்லீம் ஆசிரியரை தாக்கிய இந்துத்துவா கும்பல்

பீகாரில் வந்தே மாதரம் பாடவில்லை எனக்கூறி முஸ்லீம் ஆசிரியரை உள்ளூரைச் சேர்ந்த இந்துத்துவா   கும்பல் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலம் காதீர் மாவட்டம் அப்துல்லாபூரில் உள்ள பள்ளியில் அப்சல் உசைன் ஆங்கில ஆசிரியராகவும், உருது ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் கடந்த மாதம் 26-ம் தேதி குடியரசு தின விழா பள்ளியில் கொண்டாடப்பட்டது. விழாவில் வந்தே மாதரம் பாடலை ஆசிரியர் அப்சல் உசைன் பாடவில்லை எனக்கூறி உள்ளூர் இந்துத்துவா கும்பல்  சிலர் சரமாறியாக அவரை தாக்கி உள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

இது குறித்து ஆசிரியர் கூறுகையில், நாங்கள் அல்லாவின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். வந்தே மாதரம் எங்கள் நம்பிக்கைக்கு எதிரானது என்று கூறினார்.

இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரி தினேஷ் சந்திரதேவ் கூறுகையில்,  இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த புகாரும் எங்களுக்கு வரவில்லை. ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியது உண்மையென்றால் விசாரணை நடத்தப்படும் எனத்தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top