இந்து மகாசபா தலைவர் பூஜா பாண்டே காந்தியின் உருவ பொம்மையைச் சுட்டு, தீ வைத்து மகிழ்ந்தார்!

மத்தியில் ஆளும் பாஜக வின் இரட்டைவேடம் அம்பலத்திற்கு வந்தது. காந்தியின் உருவ பொம்மையைச் சுட்டு, தீ வைத்த இந்து மகாசபா தலைவர் பூஜா பாண்டே மற்றும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அவரின் கணவர் அசோக் பாண்டே ஆகிய இருவரும் பொதுமக்களின் அழுத்தம் காரணமாக உத்தரப் பிரதேச போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

ஆர்எஸ்எஸ் காரர்களும் பாஜக வும் மகாத்மா காந்திக்கு எதிரான கோட்பாட்டைக் கொண்டவர்கள்.ஆனால் பாஜக ஆட்சியில் இருப்பதால் அதை வெளிப்படையாக சொல்லமுடியவில்லை அப்படி சொன்னால் அது இந்திய அரசியலமைப்பு சட்டப்படி குற்றமாகி விடும்.ஆகையால் பெயரளவில் மகாத்மா காந்தியை கொண்டாடுவார்கள்.அதற்கு சாட்சிதான் அகில பாரத இந்து மகாசபா அமைப்பைச் சேர்ந்த பூஜா சகுண் பாண்டேயின் நடவடிக்கை!

மகாத்மா காந்தி கடந்த 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி நாதுராம் கோட்சேவால் டெல்லியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் காந்தியின் 71-வது நினைவுநாள்  ஒவ்வோர் ஆண்டும் ஜன.30 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கடந்த வாரம் காந்தியின் நினைவு நாளில் அலிகர் நகரில் அகில பாரத இந்து மகாசபா அமைப்பைச் சேர்ந்த பூஜா சகுண் பாண்டே என்ற பெண் தலைவர் தலைமையில் சிலர் மகாத்மா காந்தியின் உருவ பொம்மையை வைத்து அதைத் துப்பாக்கியால் (ஏர்கன்) சுட்டு மகிழ்ந்து கொண்டாடினர்.

அந்த காந்தி உருவ பொம்மையில் வைக்கப்பட்டிருந்த சிவப்பான திரவம், ரத்தம் போல் வழிந்து ஓடியது. அதையடுத்து, அந்த காந்தி உருவ பொம்மை மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொளுத்தினார்கள். இதை வீடியோவாக எடுத்து வெளியிட்டனர். சுடும்போது நாதுராம் கோட்சே வாழ்க என்று இந்தியில் முழக்கமிட்டனர்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து இந்து மகாசபா அமைப்பைச் சேர்ந்த 12 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் இதில் தொடர்புடைய வலதுசாரி அமைப்பான இந்து மகாசபா அமைப்பின் தலைவர் பூஜா சகுண் பாண்டே மற்றும் அவரின் கணவர் அஷோக் பாண்டேவை உத்தரப் பிரதேசக் காவல்துறையினர் அலிகரில் நேற்று கைது செய்தனர்.

முன்னதாக, இவ்வழக்கில் தொடர்புடைய 3 பேரை, கடந்த வாரத்தில் உ.பி. போலீஸார் கைது செய்தனர்.

காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவைக் கவுரவிக்கும் வகையில், காந்தியின் நினைவு நாளை ‘தைரிய நாளாக’ சில வலதுசாரி அமைப்புகள் அனுசரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top