வேலையில்லா திண்டாட்டம்;தமிழகத்தில் துப்புரவுப் பணிக்காக விண்ணப்பித்த 4,600 பட்டதாரிகள்,பொறியாளர்கள்

பாஜக வின் மோடி அரசு பதவி ஏற்றவுடன் ஆண்டுதோறும்  இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று போலியாயன வாக்குறுதியை தந்து மக்களை ஏமாற்றியதன் விளைவு  வேலையில்லா திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்து விட்டது .

கடந்த 2017-18-ம் ஆண்டு வேலையின்மை குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், வேலையின்மை நிலவரம் 6.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கடந்த 1972-73-ம் ஆண்டுக்குப்பின் மிகப்பெரிய உயர்வாகும்.என்று ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.

நேற்று மக்களவையில் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விக்கு பாஜக வின் தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் கெங்வார்  “பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப்பின் நாட்டில் வேலையின்மை குறித்த புள்ளிவிவரங்கள் ஏதும் அரசிடம் இல்லை. தொழிலாளர் நலத் துறையிடமும் இல்லை ” எனத் தெரிவித்தார்

கடந்த வருடம் தமிழகச் சட்டசபையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ஐம்பதாயிரம் சிறு குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டன என்று முதலமைச்சர் ஒரு செய்தியை கூறினார்.

தமிழகத்தின் வளங்கள் சூறையாடப்பட்டும்.வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டும் உள்ள இந்த சூழலில், தமிழக சட்டப்பேரவையில் துப்புரவு மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கான வேலை குறித்து தலைமைச் செயலகம் அறிவித்திருந்தது.

கூட்டிப் பெருக்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கு 10 காலியிடங்களும் சுகாதாரப் பணியாளர்களுக்கு 4 காலியிடங்களும் இருந்தன.

இந்நிலையில் செப்டம்பர் 26-ம் தேதி தலைமைச் செயலகம் காலியிடங்களுக்கான விண்ணப்பங்களை அளித்தது.

இதற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு கல்வித்தகுதி எதுவும் தேவை இல்லை. மாற்றுத் திறனாளிகளாக இல்லாமல் இருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது 18 முடிந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வேறுபடலாம்.

இந்நிலையில் வேலைவாய்ப்பு அலுவலகம் உள்ளிட்ட ஏராளமான இடங்களில் இருந்து இதற்கு விண்ணப்பங்கள் குவிந்தன.

இளங்கலை மற்றும் முதுகலை பொறியாளர்கள், எம்பிஏ பட்டதாரிகள், இளங்கலை, முதுகலை பட்டதாரிகள், டிப்ளமோ முடித்தவர்கள் காலியிடங்களுக்காக முண்டியடித்தனர். மொத்தத்தில் 4,607 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் இருந்து 677 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

மீதியுள்ளவர்களில் இருந்து பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர் என தலைமைச் செயலகம் அறிவித்துள்ளது.

வேலையில்லா திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்து விட்டதாக சொல்லும் புள்ளிவிபரங்களுக்கு தமிழகமே இன்று சான்றாகி இருக்கிறது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top