அ.தி.மு.க.-தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை; பாஜக விவசாயிகள் மீது அக்கறை காட்டவில்லை;அன்புமணி ராமதாஸ்

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. முடிந்தவுடன் அறிவிப்போம், 4 ஆண்டுகளாக விவசாயிகள் நலனில் அக்கறை காட்டாத பா.ஜனதா அரசு, தற்போது மட்டும் அக்கறையுடன் செயல்படுவது ஏன்?. என பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்தார்.


சென்னை தண்டையார்பேட்டை கணக்கர் தெருவில் நேற்று வடசென்னை பா.ம.க. கட்சி அலுவலக திறப்பு விழா நடந்தது. இதில் பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்துகொண்டு கட்சி அலுவலகத்தை திறந்துவைத்தார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள 6 மாதத்துக்கு முன்பாகவே தயார் நிலையில் உள்ளோம். களப்பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டது. தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் வறட்சியை தமிழக அரசு திட்டமிட்டு எதிர்கொள்ள வேண்டும்.வடகிழக்கு பருவமழை பொய்த்ததாலும், 40 விழுக்காடு மழை மட்டுமே பெய்திருப்பதாலும் இன்னும் இரண்டு மாதங்களில் மிகக்கடுமையான வறட்சி ஏற்படும். அதற்கு இப்போது இருந்தே திட்டமிட்டு, அண்டை மாநிலங்களில் இருந்து நீரை கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேற்கு வங்கத்தில் மத்திய, மாநில அரசுகளின் உறவு சுமுகமாக இருக்கவேண்டும். சுமுகமாக இருந்தால்தான் மாநிலம் முன்னேற்றம் அடையும். ஆனால், சி.பி.ஐ.யை வைத்தும், மற்ற அமைப்புகளை வைத்தும், மிரட்டுவது நியாயமற்றது. நியாயமான முறையில் மத்திய அரசு நடந்து கொள்ள வேண்டும். சட்டத்துக்கு உள்ளடங்கிய செயல்களில் மட்டுமே ஈடுபட வேண்டும்.தமிழக சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கவேண்டும். ஆனால் தற்போது ரூ.6 ஆயிரம் மட்டுமே வழங்குகின்றனர். இதை அதிகப்படுத்த வேண்டும். விவசாயிகளின் வங்கி, கூட்டுறவு கடன்களை அரசு தள்ளுபடி செய்யவேண்டும்.நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி, கமல் போட்டியிடுவது அவர்களின் விருப்பம். 4 ஆண்டுகளாக விவசாயிகள் நலனில் அக்கறை காட்டாத பா.ஜனதா அரசு, தற்போது மட்டும் அக்கறையுடன் செயல்படுவது ஏன்?.உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தில் பெட்ரோல், டீசல் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. முடிந்தவுடன் அறிவிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top