மேற்கு வங்க விவகாரம்: போலீஸ் கமிஷனரை விசாரிக்கலாம், கைது செய்யக்கூடாது;சுப்ரீம் கோர்ட் உத்தரவு

சி.பி.ஐ.யை மத்தியில் ஆளும் பாஜக அரசு எப்படி கையாளுகிறது என்பது ஊரறிந்த விசயமாக இருக்கிறது. அதன் இயக்குனரை கட்டாய விடுப்பில் அனுப்பியது.சுப்ரீம் கோர்ட் கட்டாயவிடுப்பில் அனுப்பியது தவறு என்று சொன்னதும்.அவரை மோடி தன்னிச்சையாக வேறு துறைக்கு மாற்றியது என்று வரலாறு நீளும்…

அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் ,சுப்ரீம்கோர்ட் ,ரிசர்வுவங்கி என பலதுறைகளிலும் பாஜக கட்சிக்கு வேண்டியவர்களை நியமித்து தங்களுக்கு வேண்டியதையும் மாநில அரசை மிரட்டவும் பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிற சூழலில்   

சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமாரிடம் விசாரணை நடத்தவும், வழக்கு தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை பெறவும் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் அவரது வீட்டுக்கு எந்தவித ஆணையும் இன்றி சென்றனர். 

அப்போது, சிபிஐ அதிகாரிகளை உள்ளூர் போலீசாரால் தடுத்து நிறுத்தி கைது செய்து  போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதும், பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு சிபிஐ அதிகாரிகளை வைத்து மாநிலங்களின் உரிமைகளில் தலையிடுகிறார்கள் என ஆந்திர மாநிலமும் மேற்கு வங்க மாநிலமும் சிபிஐ க்கு தடை விதித்து இருக்கிறார்கள்

இதற்கிடையில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போலீஸ் கமிஷனரின் வீட்டுக்கு நேரில் சென்றதோடு, மத்திய அரசை கண்டித்தும், அரசியல் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 3-வது நாளாக  மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டம் நீடித்து வருகிறது.  அவருடைய கட்சியினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தர்ணாவில் ஈடுபட்டுள்ள மம்தா பானர்ஜியுடன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா ஆகியோர் நேற்று தொலைபேசியில் பேசி ஆதரவு தெரிவித்தனர்.

இது தொடர்பாக சி.பி.ஐ. சுப்ரீம் கோர்ட்டில் 2 மனுக்களை நேற்று தாக்கல் செய்தது. 

அதில் ஒரு மனுவில், “பலமுறை சம்மன் அனுப்பியும் கொல்கத்தா நகர போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமார், சிட்பண்ட் மோசடி தொடர்பான விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களையும் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கவில்லை. எனவே அந்த ஆவணங்களை சி.பி.ஐ. வசம் போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமார் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

இதேபோல் சி.பி.ஐ. தாக்கல் செய்த மற்றொரு மனுவில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில்தான் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த சென்றதாகவும், அவர்களை மேற்கு வங்காள போலீஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதும், அரசியல்வாதிகளுடன் இணைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை என்றும், எனவே அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

அதுபோல் மேற்கு வங்க அரசு சார்பாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மேலும், கொல்கொத்தா உயர்நீதிமன்றத்தில் சிபிஐ யின் அத்துமீறல் குறித்தும் மனு தாக்கல் செய்யப்பட்டது

அந்த மனுக்களை  சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க மறுத்த நீதிபதிகள் மனு மீதான விசாரணை (செவ்வாய்க்கிழமை) இன்று நடைபெறும் என்று கூறினார்.

இன்றும் சாரதா நிதி மோசடி வழக்கில் மூத்த காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு எதிராக ஆவணங்கள் கிடைத்துள்ளன என சிபிஐ  சார்பில் இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. 

.

போலீஷ் கமிஷனர் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க நாங்கள் உத்தரவிடுகிறோம். பின்னர் கோர்ட் அவமதிப்பு வழக்கை விசாரிப்பதாக நீதிபதிகள் கூறினர்.

போலீஸ் கமிஷனர் ராஜூவ் குமார்  சிபிஐ  விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க கோரியும், விசாரணைக்கு ஆஜராக கோரியும் சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. 

போலீஷ் கமிஷனரை  கைது செய்யக்கூடாது, சிபிஐ போலீஸ் கமிஷனரை கட்டாயப்படுத்தி வாக்குமூலத்தை பெறக்கூடாது எனவும் சுப்ரீம் கோர்ட்  உத்தரவிட்டு உள்ளது.

மேலும், மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் கொல்கத்தா போலீஸ் கமிஷனரை ஆஜராக உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், அதுபோல் கோர்ட் அவமதிப்பு வழக்கில் மேற்கு வங்க தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு உள்ளது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு மூலம் எங்களுக்கு வெற்றி கிடைத்து உள்ளது என மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.

.போராட்டத்தின் போது மம்தா பானர்ஜி பேசியதாவது:-

சிபிஐ விசாரணைக்கு நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம் என சொல்லவில்லை.  சுப்ரீம் கோர்ட் உத்தரவு மூலம் எங்களுக்கு வெற்றி கிடைத்து உள்ளது. போலீஷ் கமிஷனரை கைது செய்யக்கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. அந்த உத்தரவை நாங்கள் வரவேற்கிறோம். அரசியல் ரீதியாக சிபிஐ பயன்படுத்தப்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம். என்றார்

நீதித்துறை மற்றும் அனைத்து நிறுவனங்களுக்கும் நாங்கள் மிகவும் மரியாதை காட்டுகிறோம். நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நாங்கள் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம் என்றும்  கூறினார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top