பா.ஜ.க. மிரட்டலுக்கு பயந்து கோட்டை அமீர் பதக்கத்தை வழங்க மறுத்தது அதிமுக அரசு;துரைமுருகன் அறிக்கை

மத நல்லிணக்கத்துக்காக பாடுபட்டு தனது இன்னுயிரை பறி கொடுத்த கோவை மாநகரத்தை சேர்ந்த கோட்டை அமீர் பெயரில் மத நல்லிணக்கப்பதக்கம் ஒவ்வொரு குடியரசு தின விழாவிலும் வழங்கப்படுகிறது.

தி.மு.க. பொருளாளரும், சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மத நல்லிணக்கத்துக்காக பாடுபட்டு தனது இன்னுயிரை பறி கொடுத்த கோவை மாநகரத்தை சேர்ந்த கோட்டை அமீர் பெயரில் மத நல்லிணக்கப்பதக்கம் ஒவ்வொரு குடியரசு தின விழாவிலும் வழங்கப்படுகிறது. மேலும் ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.

ஆனால், இந்த குடியரசு தின விழாவில் இந்த பதக்கத்தை வழங்காமல் புறக்கணித்திருக்கும் அ.தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். வருகின்ற தேர்தலில் அமையப்போகும் பா.ஜ.க.–அ.தி.மு.க. கூட்டணிக்கு அச்சாரமாகவும், பா.ஜ.க.வின் மிரட்டலுக்கு பயந்தும் கோட்டை அமீர் பதக்கத்துக்கு இந்த வருடம் யாரையும் தேர்வு செய்யாமலும், அந்த பதக்கத்தை யாருக்கும் வழங்காமலும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புறக்கணித்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஆகவே சமய நல்லிணக்கத்துக்காக பாடுபட்ட ஒருவரை கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கத்துக்கு தேர்வு செய்து அவருக்கு அந்த பதக்கத்தை உடனடியாக வழங்க வேண்டும். கோட்டை அமீரின் 25–வது ஆண்டு நினைவு தினத்தை அரசு விழாவாக நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top