அமெரிக்க முயற்சி தோல்வி;ராணுவத்தின் ஆதரவுடன் வெனிசுலா அதிபர் பதவியை தக்கவைத்த மதுரா

தென் அமெரிக்க நாடுகளில் எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் ஒன்று வெனிசூலா. இது ஒரு கம்யூனிஸ்ட் நாடு. இந்த நாட்டில் அதிபராக இருந்த சாவேஸ் கடந்த 2013-ம் ஆண்டு காலமானார். அதனை தொடர்ந்து நிகோலஸ் மதுரோ வெனிசூலாவின் அதிபர் ஆனார்.

நிகோலஸ் மதுரோவின் ஆட்சிக்கு அமெரிக்கா போன்ற நாடுகள் எதிராக இருந்ததால்  அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. இருந்தாலும் அதிபர் திறமையாக ஆட்சியை நடத்திவந்தார். அதிபரை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக கைகோர்த்தன.

தீவிர இடதுசாரியான மதுரோவை ஆளில்லா விமானத்தில் வெடிகுண்டு நிரப்பிக் கொல்ல நடந்த சதியில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

நிகோலஸ் மதுரோ இரும்பு கரம் கொண்டு எதிர்கட்சிகளின் சதிகளை வென்றார்.  கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு மே மாதம் அதிபர் தேர்தலை அவர் நடத்தினார்.

மீண்டும் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்றார். மேலும், நாடாளுமன்றத்தில் முழுவதுமாக ஆதிக்கம் செலுத்தி வரும் எதிர்க்கட்சியினர், நிகோலஸ் மதுரோ அதிபர் பதவி ஏற்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், கடந்த 10-ந் தேதி 2-வது முறையாக அந்நாட்டின் அதிபராக நிகோலஸ் மதுரோ பதவி ஏற்றுக்கொண்டார்.

இதற்கிடையில் எதிர்க்கட்சி தலைவரான நாடாளுமன்ற சபாநாயகர் ஜூவான் குவைடோ (வயது 35), தான் அதிபர் ஆவதற்கு தயாராகி வருவதாக தன்னிச்சையாக அறிவித்தார்.

இந்த விவகாரம் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. ஜூவான் குவைடோ விற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அதே வேளையில், நிகோலஸ் மதுரோவை பதவி விலக வலியுறுத்தின.

ஜனநாயக ரீதியில் வெற்றிப்பெற்ற நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக தலைநகர் கராக்கசில் பிரமாண்ட பேரணியை நடத்த ஜூவான் குவைடோ அழைப்பு விடுத்தார். இந்த போராட்டத்துக்கு அமெரிக்கா நேரடியாக தனது ஆதரவை தெரிவித்தது.

வெனிசூலாவில் இடதுசாரி கட்சி அதிபரை வீழ்த்தி, ஜனநாயகத்தை படுகொலைச் செய்ய அமெரிக்கா ஜூவான் குவைடோவிற்கு  துணை நின்றது. இந்த நிலையில், திட்டமிட்டப்படி நேற்று முன்தினம் கராக்கசில் பேரணி நடந்தது. அதே போல் நாட்டின் பிற நகரங்களிலும் அதிபருக்கு எதிரான அமெரிக்கா துணையுடன் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த போராட்டத்தின் போது கராக்கஸ், பரினாஸ், தச்சிரா, பொலிவர் ஆகிய நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அமெரிக்க ஆதரவாளர்கள் 16 பேர் பலியாகினர்.

இதற்கிடையில் கராக்கசில் நடந்த பேரணியின் போது, ஜூவான் குவைடோ தன்னை தானே வெனிசூலாவின் இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்டார். இது வெனிசூலா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .

இதற்கிடையே ஜூவான் குவைடோவை வெனிசூலாவின் இடைக்கால அதிபராக அமெரிக்கா அங்கீகரித்துள்ளது. வெனிசூலாவின் ஜனநாயகத்தைக் காக்க அமெரிக்கா தனது பொருளாதாரம் மற்றும் தூதரக அதிகாரத்தின் முழு பலத்தையும் பயன்படுத்தும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார்

மேலும், அமெரிக்காவை போல பிற நாடுகளும் ஜூவான் குவைடோவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார். அந்த வகையில் ஜூவான் குவைடோவுக்கு கனடா தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

அதேசமயம் ரஷியா மற்றும் துருக்கி ஆகிய 2 நாடுகளும் நிகோலஸ் மதுரோவுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், ஜூவான் குவைடோவுக்கு ஆதரவு அளித்ததால் அமெரிக்கா உடனான அனைத்து உறவுகளையும் முறித்துக்கொள்வதாக அதிபர் நிகோலஸ் மதுரோ அறிவித்தார். அமெரிக்க தூதரகங்கள்  மூட உத்தரவும் யிட்டார்.

வெனிசுலாவில் வலிமைமிக்க ராணுவத்தின் ஆதரவுடன் அதிபர் பதவியை  நிகோலஸ் மதுரா தக்கவைத்துள்ளார். இது ஏற்கெனவே உள்ள அமெரிக்க எதிர்ப்பு நிலைப்பாட்டை அதிகரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரும் ராணுவத் தலைவருமான விளாடிமிர் பத்ரினோ, மதுரோவை சட்டபூர்வமான அதிபராக அறிவித்தார்.

அவரைத் தொடர்ந்து மற்ற 8 தலைவர்களும்  மாநிலத் தொலைக்காட்சியில், மதுராவை அங்கீகரித்து செய்தி வெளியிட்டுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top