நியூசிலாந்து – இந்தியா முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி; சூரிய ஒளியால் ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்

நேப்பியரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் சூரிய ஒளியால் பந்தை பார்க்க முடியவில்லை என தவான் கூறியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

நியூசிலாந்து – இந்தியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. குல்தீப் யாதவ் (4), முகமது ஷமி (3), சாஹல் (2) ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் நியூசிலாந்து 157 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் 81 பந்தில் 64 ரன்கள் சேர்த்தார்.நியூசிலாந்து அணி 38 ஓவர்கள் மட்டுமே விளையாடியதால் ‘இன்னிங்ஸ் பிரேக்’ விடாமல் இந்தியா தொடர்ந்து பேட்டிங் செய்தது. இந்தியா 9 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்திருக்கும்போது ‘இன்னிங்ஸ் பிரேக்’ விடப்பட்டது.


‘இன்னிங்ஸ்’ பிரேக் முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ரோகித் சர்மா 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். 11-வது ஓவரை பெர்குசன் வீசினார். முதல் பந்தை தவான் சந்தித்தார். லெக் சைடு வைடாக வீசிய அந்த பந்தை தவானால் எதிர்கொள்ள முடியவில்லை.அந்த நேரத்தில் சூரியன் மறையக்கூடிய மாலை நேரம். சூரிய ஒளி கிழக்கு திசையில் பேட்டிங் செய்து கொண்டிருந்த தவானின் கண்ணை மறைத்தது. இதனால் மைதான நடுவரிடம் சென்ற அவர், சூரிய ஒளி கண்ணை கூச வைப்பதாகவும் தன்னால் பந்தை பார்க்க முடியவில்லை என்றும் தெரிவித்தார். ஆகவே, நடுவர்கள் சூரியன் மறையும் வரை சுமார் அரைமணி நேரம் ஆட்டத்தை நிறுத்தினர்.இதனால் ரசிகர்கள் வியப்பில் ஆழந்தனர். ரசிகர்கள் மட்டுமல்ல, நடுவரும் நான் இதுவரை சூரிய ஒளியால் ஆட்டம் நிறுத்தப்பட்டதை கேள்விப்பட்டதில்லை என்றார்.பொதுவாக மைதானத்தில் ஆடுகளம் வடக்கு தெற்காகத்தான் அமைக்கப்படும். அப்போதுதான் சூரிய ஒளி தாக்காது. ஆனால் நேப்பியரில் ஆடுகளம் கிழக்கு மேற்கு திசையில் அமைக்கப்பட்டுள்ளதால் ஆட்டத்தை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.அரைமணி நேரம் கழித்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இந்தியாவிற்கு 49 ஓவரில் 156 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top