கஜா புயல் நிவாரண நிதி எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது?: நீதிமன்றம் விசாரணை ஒத்திவைப்பு

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பாதித்தமக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க மத்திய அரசும், மாநில அரசும் முன்வரவில்லை.அரசியல் இயக்கங்களும் ,தன்னார்வ அமைப்புகளும் தான் உடனடி நிவாரணம் வழங்கி அந்த மக்களுக்கு உதவியாக இருந்தது.

சில இடங்களில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கொடுக்க இருந்த உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் பிடுங்கி அதில் ஓபிஎஸ் ,இபிஎஸ் படங்களை ஒட்டி மக்களுக்கு வழங்கியதாக ஒரு குற்றச்சாட்டும் உண்டு  

இந்த நிலையில் ,கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கக் கோரி எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின், ராமநாதபுரம் திருமுருகன், திருச்சி தங்கவேல் உட்பட பலர் உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, கஜா புயல் நிவாரணத்துக்காக பதினையாயிரம் கேட்டிருந்த நிலையில் மத்திய அரசு ரூ.1146.12 கோடி ஒதுக்கியதாக தெரிவிக்கப்பட்டது.யானை பசிக்கு சோளப்பொறி என்பதுபோல என்று முதல்வர் அவர்களே அறிக்கை வெளியிட்டு இருந்தார்கள்

இவ்வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி. ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. எந்த அடிப்படையில் கஜா புயல் நிவாரண நிதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பாக தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜன.28-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top