தேர்தல் அவசரம்; 10 சதவீத உயர் சாதி இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்த பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு

வரும் கல்வியாண்டு முதல் ‘‘பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர் சாதி ஏழைகளுக்கு தனியார் உட்பட எல்லா கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும்’’ என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்

மத்தியில் ஆளும் பாஜக அரசு வரும் தேர்தலை மனதில் கொண்டு யாரும் கேட்காமலே உயர் சாதியில் உள்ள ஏழைகளுக்கு, கல்வி, வேலைவாய்ப்பு களில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றியது.இது இட ஒதுக்கீடு சட்டத்திற்கு புறம்பாக இருந்தாலும் இதை தமிழ்நாடு தவிர்த்து எந்த கட்சியும் ஆட்சபனை செய்யவில்லை

இதுதொடர்பான எந்த கேள்வியும் கேட்காமல் சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர் சாதி ஏழைகளுக்கு வரும் 2019 – 20 கல்வியாண்டு முதல் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும். நாட்டில் உள்ள தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்திலும் இந்த இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்.

தற்போது எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடுகள் தொடரும். அதற்கு மேல் கூடுதலாக 10 சதவீத இடங்கள்தான் உயர் சாதி ஏழைகளுக்கு வழங்கப்படும்.
நாட்டில் உள்ள 40 ஆயிரம் கல்லூரிகள், 900 பல்கலைக் கழகங்களில் இந்த ஒதுக்கீடுகள் அமல்படுத்தப்படும். இதில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கும் தனியார் கல்லூரி, பல்கலைக் கழகங்களில் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டியது கட்டாயம். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு பாதிக்காத வகையில், 2019 – 20 கல்வியாண்டில் உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு இருக்கும். கூடுதல் இடங்கள் ஒதுக்குவதன் மூலம் 10 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும். அதன் படி 25 சதவீத இடங்கள் கூடுதலாக அதிகரிக்கும்.
இவ்வாறு மத்திய அமைச்சர் ஜவடேகர் கூறினார்.

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர் சாதி ஏழைகளுக்கான இந்த இட ஒதிக்கீட்டை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் வருவதற்கு முன்னே தேர்தலுக்காக உடனடியாக நிறைவேற்ற பாஜக அரசு துடித்துக்கொண்டு இருக்கிறது.ஒருவேளை உச்சநீதிமன்றத்தில் இதற்கு எதிராக தீர்ப்பு வந்தால் சபரிமலை விவகாரம்போல் இட ஒதுக்கீடு பிரச்சனையை நாடு முழுவதும் பிரச்சனையாக்கி தேர்தலுக்கு குளிர்காயலாம் என திட்டமிட்டுருப்பதாக தெரிகிறது.

இது தெரியாமல் சிபிஎம் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் பாஜக வெட்டிய குழியில் விழுந்துவிட்டது என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top