சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா அதிரடியாக நீக்கம்: பிரதமர் மோடி மீண்டும் தன்னிச்சை முடிவு!

மத்திய அரசினால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட அலோக் வர்மாவை உச்ச நீதிமன்றம் மீண்டும் சிபிஐ இயக்குநராக மீண்டும் நியமித்தது.மேலும் பிரதமர் மோடி பாரபட்சமாக, தன்னிச்சையாக அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது தவறு என்றும் சிபிஐ இயக்குநர் மீதான எந்த முடிவையும் உயர்மட்டக் குழுதான் எடுக்கவேண்டும் என்று சொல்லியிருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பிரதமர் மோடியின் நடவடிக்கையை கேள்விக்குள்ளாக்கியதாலும் தனிப்பட்ட முறையில் தான் பாதிக்கப்பட்டதாக மோடி நினைத்ததாலும் மீண்டும் சிபிஐ இயக்குநரான அலோக் வர்மாவை பழி வாங்க முயற்சித்து உடனடியாக உயர்மட்டக்குழுவை கூட்டி அலோக் வர்மாவை சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து நீக்கிவிட்டார்.

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் ஜனவரி 10ம் தேதி தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான உயர்மட்டக் குழு சுமார் 2 மணி நேரம் கூட்டம் நடத்திய பிறகு அலோக் வர்மா நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தனது பிரதிநிதியாக நியமித்த நீதிபதி ஏ.கே. சிக்ரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மத்திய அரசினால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட அலோக் வர்மாவை உச்ச நீதிமன்றம் மீண்டும் சிபிஐ இயக்குநராக மீண்டும் நியமித்தது. மேலும் தேர்வுக்குழு அலோக் வர்மா குறித்த முடிவை எடுத்துக் கொள்ளட்டும் என்று உச்ச நீதிமன்றம் அரசு தரப்புக்கு முடிவை விட்டுவிட்டது. இவரது பதவிக்காலம் ஜனவரி 31ம் தேதி முடிவுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அலோக் வர்மா நீக்கப்பட்டுள்ளார். அதாவது இந்த முடிவு 2:1 பெரும்பான்மை முடிவின் படி எட்டப்பட்டுள்ளது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மட்டும் அலோக் வர்மாவை நீக்கும் முடிவை ஏற்கவில்லை என்றும் அவர் இந்த முடிவை ஒத்திப் போட வேண்டும் என்று தெரிவித்ததாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடியும் நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகியோர் அலோக் வர்மாவுக்கு எதிராக மத்திய கண்காணிப்பு ஆணையம் தயாரித்த அறிக்கையில் தகுதி இருப்பதாகக் கருதினர்.

இதே [சிவிசி] அறிக்கையின் அடிப்படையில்தான் அலோக் வர்மாவை மோடி அரசு கட்டாய விடுப்பில் அனுப்பிவைத்தது.

அலோக் வர்மா தான் இல்லாத போது இடைக்கால இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவின் பெரும்பாலான பணியிட மாற்ற உத்தரவுகளை ரத்து செய்தார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் அறிக்கையை இந்தக் கூட்டத்துக்கு முன்பாகக் கேட்டுள்ளார்.

மேலும் மல்லிகார்ஜுன கார்கே, அலோக் வர்மா தன் தரப்பு நியாயத்தைப் பேச கமிட்டி வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தான் கருதியதாகத் தெரிவித்தார்

சிபிஐ இயக்குநர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து, தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று அலோக் வர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வியாழக்கிழமை இரவு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அற்பமான, பொய்யான மற்றும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளது வருத்தத்தைத் தருகிறது. இவை அனைத்தும் எனக்குப் பகையான ஒரு நபரால் (ராகேஷ் அஸ்தானா) உருவாக்கப்பட்டவை.
சிபிஐ இயக்குநராக என்னுடைய வருங்காலத்தை நிர்ணையிக்கும் பொறுப்பை மேற்கொண்ட குழுவின் ஆணைக்கு இணங்கும் நிலைக்கு மாற்றப்பட்டேன்.

சிபிஐ நிறுவனத்தின் ஒருமைப்பாட்டை அழிப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதைக் காத்திருக்கிறேன். மீண்டும் இயக்குநர் பொறுப்பு என்னிடம் வழங்கப்படும் எனில், சட்ட விதிகளின்படி, அதையே திரும்பச் செய்வேன்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவும் கடந்த அக்டோபர் 23-ல் வெளியான சிவிசி உத்தரவுகளும் என்னுடைய உண்மைக்கான ஆதாரங்கள்” என்று தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top