அமைதிக்கான முயற்சிகளை இந்தியாவே தடுக்கிறது! பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமைதி முயற்சிகளை இந்தியா நிராகரிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்பு விழாவிற்கு இந்தியாவிலிருந்து அவருடைய பழைய நண்பரும் கிரிக்கெட் வீரருமான பஞ்சாப்பை சேர்ந்த சித்திக் சென்றதற்கு மத்திய பாஜக அரசு கடுமையான கண்டனங்களை பகிர்ந்து இருந்தது.

அண்டை நாட்டோடு வெறும் பகைமையை மட்டும் வளர்ப்பது நல்லதல்ல என்று பல பத்திரிகைகள் எழுதினாலும் மத்திய பாஜக அரசு பாகிஸ்தானை ஒரு எதிராளியின் நாடு என்றுதான் கருதுகிறது.இந்து மதம் இஸ்லாமிய மதம் என இரு எதிர் நிலைகளை முன் நிறுத்தி அரசியல் செய்யும் பாஜக எளிய மக்களை உணர்வு பூர்வமாக தன பக்கம் வைத்துக்கொள்ள ஒரு உத்தியாகவே இதை பயன்படுத்துகிறது.இது இந்தியாவின் வெளிஉறவு கொள்கையை பாதிக்கும்.இந்த நிலையில்

துருக்கி நாட்டைச் சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இம்ரான்கான் அளித்துள்ள பேட்டி முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த பேட்டியில் “இந்தியாவும், பாகிஸ்தானும் அணுசக்தி நாடுகளாகும். இந்த இருநாடுகளும் போர் குறித்தோ அல்லது மறைமுக போர் குறித்தோ சிந்தித்து பார்க்கக் கூடாது.

ஏனெனில், இது நிலைமையை மேலும் மோசமாக்கி விடும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு அமைதி பேச்சு ஒன்றுதான் சிறந்த வழியாகும். அணுசக்தி திறன் கொண்ட இருநாடுகளும் போரிடுவது, சம்பந்தப்பட்ட இருநாடுகளும் தற்கொலை செய்து கொள்வதற்கு சமமாகும்.

இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதுதான் எனது விருப்பமாகும். ஆனால் எனது முயற்சிகளை இந்தியா நிராகரிக்கிறது. காஷ்மீர் மக்களின் உரிமைகளை இந்தியாவால் ஒருபோதும் ஒடுக்க முடியாது” இவ்வாறு அவர் தெரிவித்தார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top