விடுதலைப் புலிகளின் மெய்நிகர் அரசில் வணிக கப்பல் இயக்கிய கேப்டன் பிறைசூடி சென்னையில் காலமானார்

விடுதலைப் புலிகள் தமிழீழ மண்ணில் தமிழர்களுக்கான வங்கி, போக்குவரத்துக் கழகம், நீதிமன்றம்,என பல துறைகளை துவங்கி தன்னிறைவான ஒரு மெய்நிகர் அரசை உருவாக்கி இருந்தனர். அவர்கள் மேலும், தமிழீழ மக்களுக்கான கடல்வழி போக்குவரத்து கட்டமைப்பையும் உருவாக்கி இருந்தனர் .அதில் ஒன்று ‘சோழன்’ என்ற வணிகக் கப்பல்

மக்கள் வணிகத்திற்கான அந்த ‘சோழன்’ என்ற வணிகக் கப்பலை இயக்கியவர் கேப்டன் கனகசபை பிறைசூடி (76) என்பவர். இவர் சென்னையில் கடந்த 2-ம் தேதி காலமானார்.

இலங்கையாழ்ப்பாணம், வல்வெட்டித் துறைக்கு அருகில் திக்கம் என்ற ஊரில் 1942-ல் பிறந்தவர் பிறைசூடி. புலிகள் அமைப்பு தொடங்கப்பட்டது முதல் இறுதிப்போர் நடந்த 2009 வரை முழுமையான பங்களிப்பை அளித்தவர். பிறைசூடி அவர்கள்.

இங்கிலாந்து கப்பல் படையில் பணியாற்றிய அவருக்கு, கப்பல் கட்டும் தொழிலிலும் பயிற்சி இருந்தது. கடல்வழி தாக்குதலில் புலிகள் பெற்ற வெற்றிகளுக்கு பிறைசூடியின் உழைப்பும் ஒரு காரணம். பிறைசூடி பற்றி கவிஞர் காசி ஆனந்தனிடம் கேட்டபோது, ‘‘தொடக்க காலம் முதலே பிரபாகரனோடு இணைந்து பணியாற்றியவர் பிறைசூடி. இந்திய விடுதலைப் போராட்டத்தில் வ.உ.சிதம்பரம், சுதேசி கப்பலை இயக்கியதுபோல தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் சோழன் வணிகக் கப்பலை இயக்கியவர் பிறைசூடி” என்றார்.

2009 இறுதிப் போருக்குப் பிறகு குடும்பத்துடன் சென்னையில் குடியேறிய பிறைசூடி, உடல் நலக் குறைவால் கடந்த 2-ம் தேதி காலமானார். அவரது உடல் நேற்று முன்தினம் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.

தலைவர்கள் அஞ்சலி மறைந்த பிறைசூடியின் உடலுக்கு தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் புலிக்கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தினார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக. தலைவர் திருமாவளவன், கவிஞர் காசி ஆனந்தன், திரைப்பட இயக்குநர் கவுதமன் உள்ளிட்டோர் பிறைசூடியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top