தமிழகத்தில் மேலும் 10 நாட்களுக்கு கடும் குளிர் நீடிக்கும்: வானிலை மையம் தகவல்

தமிழகத்தின் பல பகுதிகளில் குளிர் அதிகரித்துள்ளது. அதற்க்கான காரணம் தற்போது வடக்கு திசையில் இருந்து தமிழகம் நோக்கி குளிர்ந்த காற்று வீசி வருகிறது. அதன் காரணமாகதான் தமிழக பகுதிகளில் குளிர் அதிகரித்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்கள்

தென் இந்தியாவில் உள்ள பல மலை நிலையங்களில் உறைபனி கொட்டுகிறது.ஊட்டியில் 4.4 சி.சி. யும் வால்பாறையில் 3.5 சிசி யும் நிலைகொண்டு குளிர் நடுக்கத்தைத். தமிழகம் முழுவதும் தருகிறது. குளிர் இரவுகள் பரவி வருகிறது. இது இன்னும் ஒரு வாரத்திற்கு தொடரும் என தமிழ்நாடு வெதர் மேன் கூறியிருக்கிறார்

குன்னூரில் 7.8 டிகிரி, கொடைக்கானலில் 8.3 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது. நிலப் பகுதியில் மிகக் குறைந்த அளவாக தருமபுரி மற்றும் கரூர் பரமத்தியில் 15 டிகிரி, வேலூர், திருத்தணி, நாமக்கல் ஆகிய இடங்களில் தலா 15.5 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது. இது மேலும் 10 நாட்கள் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top