பிரபல ஹாலிவுட் நடிகர் ‘ஜானி டெப்’ ‘பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்’ தொடர் படத்திலிருந்து திடீர் விலகல்

‘பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்’உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற படம். கரீபியன் தீவுகளில் கொள்ளையடிக்கும் கடற் கொள்ளையர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதால் இதை ஹாலிவுட் தொடர் படங்களாக எடுக்க ஆரம்பித்தது.
.
,
2003–ம் ஆண்டில் இதன் முதல் படம் வெளியாகி வசூலை வாரிக்குவித்தது. அதனை தொடர்ந்து இதுவரை மொத்தம் 5 பாகங்கள் வெளியாகி உள்ளன.

‘பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்’ தொடரில் ‘ஜாக் ஸ்பேரோ’ என்கிற கதாநாயகன் பாத்திரத்தில் ஹாலிவுட் முன்னணி நடிகர் பிரபல நடிகர் ஜானி டெப் நடித்து வந்தார். உலகம் முழுதும் அவருக்கு தீவிர ரசிகர் பட்டாளமே உண்டு. இந்த நிலையில் அடுத்த ‘பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்’ தொடரில் ‘ஜாக் ஸ்பேரோ’ கதாநாயகன் பாத்திரத்தில் நடிக்க இருந்த பிரபல நடிகர் ஜானி டெப் படத்தில் இருந்து திடீரென விலகி உள்ளார்.

இது ‘ஜானி டெப்’ ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top