மின்வாரிய அமைச்சர் பொய் வாக்குறுதி; மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம்

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் கஜா புயலில் சிறப்பாக வேலை செய்ததால் வருகிற அமைச்சரவை கூட்டத்தில் அவர்களை நிரந்தர ஊழியர்களாக நியமனம் செய்வோம் என்று உறுதிமொழி கொடுத்துவிட்டு, இது வரை எந்த அறிவிப்பும் அது குறித்து மின்வாரிய அமைச்சர் தங்கமணி வெளியிடாததால் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு பட இருக்கிறார்கள்.

இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராஜா ராஜேந்திரன் மயிலாடுதுறையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

கஜா புயல் மின் சீரமைப்பு பணியில் சிறப்பாக பணியாற்றினால் மட்டுமே, தமிழக முதல்வரிடம் கூறி ஒப்பந்த ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்வது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று மின்வாரிய அமைச்சர் தங்கமணி கூறினார். அதை ஏற்று நாங்களும் எந்தக் குறையும் வைக்காமல் சிறப்பாக பணியாற்றி வந்தோம்.

ஆனால், மின் துறை அமைச்சர், செய்தியாளர்களைச் சந்திக்கும் போதெல்லாம் மின்வாரிய ஊழியர்களை மட்டுமே பாராட்டுகிறார். அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பின்னரும் அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை, கடந்த 20-ம் தேதியுடன் மின்வாரிய நிரந்தர தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் ஊருக்குத் திரும்பி விட்டனர்.

ஆனால், ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். கஜா புயல் சீரமைப்பு பணியில் இருக்கும் தொழிலாளர்களும், உற்பத்தி, பகிர்மானம்,தொடரமைப்பு பிரிவுகளில் பணிபுரியும் தமிழகத்தின் அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களும் நாளை முதல் (டிச.25) பணி நிரந்தர அறிவிப்பு வரும்வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top