திரைப்பட விமர்ச்சனம்; `சீதக்காதி’ ஒரு கலைஞனின் கலை

கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி 80 வயதான நாடக கலைஞனாக நடித்திருக்கிறார். இயக்குநர் மகேந்திரன், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரம்யா நம்பீசன், காயத்ரி, அர்ச்சனா, பார்வதி நாயர், மவுலி, ராஜ்குமார், பகவதி வெருமாள், கருணா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்

ஒரு கலைஞன் கலையை எவ்வாறு நேசிக்கிறான் அந்த கலை மூலம் மக்களை எப்படி சந்தோசப்படுத்துகிறான். கலையின் மீது அவன் காட்டும் ஈடுபாடு,கலைக்கான அவனது தியாகம் என்ன என்பதை ஒரு நாடகக்கலைஞர்- `சீதக்காதி’ மூலம் மக்களுக்கு இயக்குனர் சொல்லியிருக்கிறார்

பாலாஜி தரணிதரண் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 25-வது படமாக உருவாகி இருக்கும் `சீதக்காதி’ நாடகங்களை பார்க்காத இந்த தலைமுறைக்கு சினிமா மூலம் சொல்லப்பட்டிருக்கும் பாடம்

நடிக்க வருபவர்கள் எல்லோரும் சினிமாவில் நடிகனாக முடியாது. நடிகனாக தேவையான திறமை, தரம் இருந்தால் தான் சினிமாவில் ஜொலிக்க முடியும். ஒரு சிறிய காட்சியில் நடிப்பதற்கு கூட கலையின் மீது ஆர்வம் இருக்க வேண்டும். அப்போது தான் அந்த காட்சி முழுமை பெறும். நடிப்பு என்பது சாதாரண விஷயம் இல்லை. நடிகன் என்ற வார்த்தைக்குள் கலைஞன் என்ற வார்த்தை அடங்கி உள்ளது. கேமரா முன்னால் நிற்பவர் அனைவரும் நடிகர் கிடையாது. அப்படி சொல்லிக் கொண்டு இருந்தாலும், அவர்கள் பெரியதாக ஜொலிக்க முடியாது. சீக்கிரமாகவே காணாமல் போய் விடுவார்கள்.

கலைக்குள் எவ்வளவு விஷயங்கள் இருக்கிறது. ஒரு கலைஞன் எவ்வளவு உயர்ந்தவன் என்பது நமக்கு தெரியால் இருந்திருக்கலாம் அல்லது நாம் கவனிக்காமல் இருந்திருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு கலைஞனின் உயரத்தை உயர்த்தி கூறியிருப்பதே படத்தின் கதை.

ராஜ்குமார் தனது ஒவ்வொரு அசைவாலும், பேச்சாலும், பார்வையாலும் ரசிக்க வைக்கிறார்.. மௌலி தனது யதார்த்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். இயக்குநர்கள் மகேந்திரன், பாரதிராஜா இயல்பான வருகிறார்கள். பகவதி பெருமாள், கருணாகரன், ரம்யா நம்பீசன், அர்ச்சனா, காயத்ரி, பார்வதி நாயர் என மற்ற கதாபாதத்திரங்கள் அனைவருமே படத்தின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கின்றனர்.

படத்தின் நீளம் கொஞ்சம் அலுப்பை தருகிறது என்றாலும் போர் அடிக்கவில்லை,சில காட்சிகளை நீக்கியிருந்தாலும் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

பேஷன் ஸ்டூடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம், உமேஷ், ஜெயராம் மற்றும் அருண் வைத்தியநாதன் இணைந்து தயாரித்துள்ளனர். ஒளிப்பதிவு – சரஸ்காந்த்.டி.கே, இசை – கோவிந்த் மேனன், படத்தொகுப்பு – ஆர்.கோவிந்தராஜ், கலை – வினோத் ராஜ்குமார், பாடல்கள் – கார்த்திக் நேத்தா, மதன் கார்க்கி, தியாகராஜன் குமாரராஜா, யுகபாரதி, தயாரிப்பு நிறுவனம் – பேஷன் ஸ்டூடியோஸ், தயாரிப்பு – சுதன் சுந்தரம், உமேஷ், ஜெயராம், அருண் வைத்தியநாதன், இயக்கம் – பாலாஜி தரணிதரண்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top