கேம்பிரிட்ஜ் அனலடிகா விவகாரம்; பேஸ்புக் நிறுவனத்துக்கு எதிராக கொலம்பியா அட்டார்னி ஜெனரல் வழக்கு

கேம்பிரிட்ஜ் அனலடிகா விவகாரம் தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் டொனால்டு டிரம்பிற்காக, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்தின் 5 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்களை திரட்டி, தவறாக பயன்படுத்தியது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக சர்வதேச அளவில் விமர்சனம் எழுந்தது.

இதை ‘பேஸ்புக்’ நிறுவனர் ஜூக்கர்பெர்க் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டதுடன், இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வோம் என உறுதி அளித்தார். இந்திய அரசியலிலும் இப்பிரச்சனை புயலை ஏற்படுத்தியது. சர்வதேச அளவில் பேஸ்புக் நிறுவனத்துக்கு இந்த விவகாரம் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், கேம்பிரிட்ஜ் அனலடிகா விவகாரம் பேஸ்புக் நிறுவனத்துக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. பயனாளர்களின் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி பகிர்ந்து கொண்டதற்காக கொலம்பியா மாவட்ட அட்டார்னி ஜெனரல் பேஸ்புக் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top