ஜம்மு காஷ்மீரில் இந்திய இராணுவம் துப்பாக்கிச் சூடு: 2 அப்பாவி இளைஞர்கள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் இந்திய இராணுவம் தீவிரவாதிகளை தேடுகிறோம் என்று சொல்லி எளிய, சாதாரண மக்களை சுட்டுக் கொல்கிறது என்று அந்த மக்கள் இந்திய இராணுவத்திற்கு எதிராக தெருவில் வந்து போராடுகிறார்கள்

நேற்று, புல்வாமா மாவட்டத்தின் ஷர்ஷாலி [Sharshali ] பகுதிக்குள் காலை நுழைந்த இந்திய இராணுவம், ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று அத்துமீறி தேடுதல் வேட்டையை நடத்தியுள்ளது, இந்த தேடுதலின் போது காஷ்மீரின் விடுதலைக்காக மிக தீவிரமாக போராடி கொண்டிருக்கும் தோழர்களின் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதலை நடத்தியுள்ளது, இந்த தாக்குதலில் அதில் அஹமத் பாத் [Adil Ahmad Bhat ] மற்றும் அனான் அஹமத் [Adnan Ahmad ] என்னும் இரண்டு காஷ்மீரிய விடுதலை போராளிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர், உடனடியாக அப்பகுதியில் இணைய சேவை தடை செய்யப்பட்டது.

இந்தியப் பத்திரிக்கைகளுக்கு இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் கொடுக்கப்பட்டது

நேற்று ,மாலை ஆயிரக்கணக்கான காஷ்மீரிய மக்கள் ஒன்றுகூட அந்த போராளிகளின் இறுதி ஊர்வலம் புல்வாமா மாவட்டத்தின் மலங்கப்புரா பகுதியில் நடைபெற்றது, ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்கள் காஷ்மீரிய விடுதலையை வலியுறுத்தியும், இந்திய இராணுவத்தின் திட்டமிட்ட தொடர் இனப்படுகொலையை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.

நேற்று முந்திய தினம் , புத்காம் மாவட்டத்தில் இந்திய இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட காஷ்மீரிய விடுதலை போராளிகளான நவீத் ஷாத் [Naveed Jatt ]மற்றும் மெஹ்ராஜ் உல் தீன் ஷபி [Mehraj ul Din Sofi alias Marouf] என்னும் இரண்டு தோழர்களின் இறுதி ஊர்வலம் பாரமுல்லா மாவட்டத்தின் Sopore -சோபூர் பகுதியில் நடைபெற்றது, இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பொது மக்களின் மீதும் இராணுவம் கடுமையான கண்ணீர் புகை குண்டு தாக்குதலை நடத்தியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top