ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி; தருண் அகர்வால் குழு அறிக்கை தாக்கல்

ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி தரலாம் என்று தருண் அகர்வால் தலைமையிலான குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் மக்கள் போராட்டம் நடைபெற்றது. அதில் தமிழக அரசு போலீஸ் உதவியோடு துப்பாக்கி சூடு நடத்தி பொதுமக்கள் 13 பேரை சுட்டு கொன்றது. பொதுமக்கள் பலி ஆனதை அடுத்து வேறு கலவரம் வந்துவிடக்கூடாது என்று ஒப்புக்காக ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.

எதிர்கட்சிகளும் பொதுமக்களும் இது கண் துடிப்பு நடவடிக்கை மந்திரிசபையை கூட்டி ஆலையை நிரந்தரமாக மூட தீர்மானம் போடுங்கள் என்று . தமிழக அரசு அதை கண்டுகொள்ளவில்லை

பசுமைத் தீர்ப்பாயம் அந்த மனுவை விசாரித்து நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தும், ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தும் உத்தரவு பிறப்பித்தது. அத்துடன், ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யுமாறும் அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு கடந்த செப்டம்பர் 10–ந் தேதியன்று தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு கடந்த 20–ந் தேதியன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

இதற்கிடையே, தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழுவினர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலும் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆய்வு நடத்தினர், சென்னை நகரிலும் விசாரணை மேற்கொண்டனர். நேற்று முன்தினம் இந்த ஆய்வுக்குழுவின் அறிக்கை தனித்தனியாக மூடி முத்திரையிடப்பட்ட 48 உறைகளில் வைத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

தருண் அகர்வால் தாக்கல் செய்த அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி தரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மூடியது நீதிக்கு எதிரானது எனவும் தருண் அகர்வால் தலைமையிலான குழு அறிக்கை தாக்கல் செய்தது. தருண் அகர்வால் தாக்கல் செய்த அறிக்கையால் தமிழக அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இது தமிழக அரசுக்கு பின்னடைவு அல்ல தமிழக மக்களுக்கு பின்னடைவு. அரசு தெரிந்தே இதை செய்தது.என்று சுற்றுசூழல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top