கஜா புயல் பாதிப்பு; மோடி பார்வையிட தமிழகம் வராதது ஏன்?- வைகோ கண்டனம்

கஜா புயலினால் தமிழகம் பாதிக்கப்பட்டதை இதுவரை பிரதமர் மோடி பார்வையிட வராதது ஏன்? என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கேள்வியெழுப்பியுள்ளார்.

இன்று வைகோ கோர்ட்டுக்கு வழக்கு விசயமாக வந்தார். பிறகு
கோர்ட்டுக்கு வெளியில் வந்த பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் வைகோ கூறியதாவது:-

புயல் வரப்போகிறது என்ற அறிவிப்பு வெளியான உடன், இந்த அ.தி.மு.க. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது. இதற்காக தமிழக அரசை பாராட்டினேன். ஏற்கனவே தானே புயல், வர்தா புயல் வீசியபோது ஏற்பட்ட இழப்பை சரி செய்ய மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்ட நிவாரண தொகையில், வெறும் 5 சதவீதம் தான் வழங்கப்பட்டது. அதுபோல, கஜா புயல் நிவாரண தொகையாக ரூ.15 ஆயிரம் கோடியை தமிழக அரசு கேட்டுள்ளது. ஆனால், இதில் வெறும் 4 சதவீதம் தான் மத்திய அரசு வழங்கும்.

உலகத்தில் உள்ள 140-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்ற பிரதமர் நரேந்திரமோடி, கேரளா மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டபோது அங்கு சென்று பார்வையிட்டார். ஆனால் கஜா புயலினால் தமிழகம் பாதிக்கப்பட்டதை இதுவரை பார்க்க வரவில்லை. அடுத்த முறை மோடி பிரதமராக முடியாது. இதுதான் அவருக்கு கடைசி வாய்ப்பு.

இவ்வாறு அவர் கூறினார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top