‘மோடியே பலசாலி’ என்று பாஜகவுக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி

10 கட்சிகளுடன் மோதும் பிரதமர் மோடி பலசாலி என்று நடிகர் ரஜினிகாந்த் அளித்துள்ள பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக கட்சிக்காரர் போல் நடிகர் ரஜினிகாந்த் அளித்துள்ள பேட்டி தமிழக மக்களிடையே நடிகர் ரஜினிகாந்த் பற்றியான பிம்பத்தை சிதைத்துள்ளது.

அவர் பாஜக ஆதரவாளர்தானே பிறகென்ன மறைக்கவேண்டியதிருக்கிறது என்று ரஜினி ரசிகர்களே சமூகவலைத்தளங்களில் பேசிக்கொள்கிறார்கள்

.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று பெங்களூரு சென்று விட்டு சென்னை திரும்பியபோது விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரின் விடுதலையில் உங்கள் நிலைப்பாடு என்ன? என்று கேட்டனர். அதற்கு ரஜினி, “எந்த 7 பேர்?. எனக்கு தெரியாது. நான் இப்போதுதான் வந்துள்ளேன்” என்று பதில் அளித்தார்.

மேலும், பா.ஜனதா ஆபத்தான கட்சியா? என்ற கேள்விக்கும், பணம் மதிப்பிழப்பு தொடர்பான கேள்விக்கும் ரஜினி பதில் அளித்தார். அவர் அளித்த பதில்கள் கடும் விமர்சனத்தை உருவாக்கியது.

குறிப்பாக ராஜீவ் கொலையாளிகள் பற்றிய கேள்விக்கு எந்த 7 பேர்? என்று அவர் கேட்டது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ராஜீவ் கொலையாளிகள் பற்றி தெரியாத இவர் எப்படி அரசியல் செய்வார் என்ற ரீதியில் நூற்றுக்கணக்கானோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
மேலும், பாஜக மேலிடத்திலிருந்து கடுமையான கண்டனங்கள் வந்தது.

இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இன்று பகல் 11.30 மணியளவில் போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேரையும் பற்றி செய்தியாளர் தெளிவாக கேட்க வில்லை எனக்கு தெரியும் என்றால் தெரியும் என்பேன். தெரியாது என்றால் தெரியாது என்பேன். இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது.

கேட்ட கேள்வி தெளிவாக இல்லை. கொஞ்சம் தெளிவாக கேட்டிருக்க வேண்டும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேர் விடுதலை பற்றி தமிழக அரசு கொடுத்துள்ள மனு என்று கேட்டிருந்தால் எனக்கு தெளிவாக புரிந்திருக்கும். என்றார்

கேள்வி இரண்டு முறை கேட்கப்பட்டது, மிகத்தெளிவாக கேட்கப்பட்டது என்று செய்தியாளர்கள் முனுமுனுத்துக்கொண்டனர்

பேரறிவாளன் பரோலில் வந்திருந்தபோது 10 நிமிடம் போனில் பேசி அவருக்கு ஆறுதல் சொன்னவன் இந்த ரஜினிகாந்த்.

இந்த வழக்கை பொறுத்தமட்டில் பல கட்டங்களில், பல இடங்களுக்கும் சென்றுள்ளது. சுப்ரீம்கோர்ட், ஜனாதிபதி என்று பல இடங்களுக்கு சென்று வந்துள்ளது. இப்போதும் தமிழக அரசு அந்த மனுவை கவர்னருக்கு அனுப்பி உள்ளது. கவர்னர் முடிவு எடுக்க வேண்டும்.

அவர்கள் 27 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து உள்ளார்கள். மனிதாபிமான முறையில் அவர்களை விடுதலை செய்வதுதான் நல்லது. இது என்னுடைய கருத்து. என்றார்

அப்புறம் இன்னொன்று எல்லா கட்சிகளும் ஒன்று சேர்ந்து பாஜக-வை தோற்கடிக்க முயற்சிக்கிறார்களே? அது ஆபத்தான கட்சியா என்று கேட்டார்கள். என்னுடைய பதில் எதிர்கட்சிகள் அப்படி நினைக்கின்றன. எதிர்கட்சிகள் அப்படி நினைக்கும்போது பாஜக அவர்களுக்கு ஆபத்தான கட்சிதானே. அது மக்களுக்கு ஆபத்தான கட்சியா? இல்லையா? என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.என்றேன் என்று அந்தர் பல்டி அடித்தார்.

பாஜக ஆபத்தான கட்சியா? இல்லையா? என்பது பற்றி ரஜினியின் கருத்து என்ன என்று நீங்கள் கேட்கிறீர்கள். என் கருத்தை இப்போது சொல்ல முடியாது. ஏனென்றால் நான் இன்னும் முழு அரசியலில் இறங்கவில்லை.

பாஜக-விற்கு எதிரான மிகப்பெரிய எதிர்ப்பு பற்றி கேட்கிறீர்கள்.10 பேர் சேர்ந்து ஒருவரை (மோடி) எதிர்த்தால் அந்த 10 பேரும் பலசாலியா? 10 பேரை எதிர்த்து போராடும் அந்த ஒருவர் பலசாலியா? என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். இதைவிட தெளிவாக எப்படி சொல்வது. என்று பாஜக கட்சிக்காரர் போல் பேசினார்.

பக்கத்தில் நின்ற ரசிகர் ஒருவர் ‘’அப்பாடி ஐ.டி ரெய்டு லிருந்து தலைவர் தப்பிவிட்டார்’’ என்றார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top