‘கஜா’ புயல் எச்சரிக்கை; 15ந்தேதி 90 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடப்பதால் கனமழை பெய்யக்கூடும்

தமிழகத்தில் நோக்கி வரும் கஜா புயல் மிக கடுமையான புயலாக இருக்கும், வரும் 15-ம் தேதி கடலூர், புதுச்சேரி பகுதியில் கரையை கடக்கும் போது காற்றுடன் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்துள்ளார்.

கஜா புயல் வரும் 15-ந்தேதி கடலூர் – ஸ்ரீஹரிகோட்டா இடையே 90 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இன்று காலை அது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக தீவிரம் அடைந்து புயலாக மாறியது.

இது இலங்கையை கடந்து வருவதால் இதன் வலுனான தன்மையை கருதி இலங்கை வானிலை மையம் இந்த புயலுக்கு ‘கஜா’ (யானை) என பெயரிட்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் கஜா-யானை புயல் வருகின்ற 15-ந்தேதி (வியாழக்கிழமை) முற்பகல் கடலூர் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என சென்னை வானிமை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவிக்கையில் ‘‘தற்போதைய நிலையில் சென்னையில் இருந்து 930 கிலோ மீட்டர் தொலைவில் கஜா புயல் உள்ளது. வருகிற 15-ந்தேதி முற்பகல் கடலூர் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே புயல் கரையை கடக்கும். அப்போது காற்று 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.

சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் 14-ந்தேதி இரவில் இருந்தே மழை பெய்ய ஆரம்பிக்கும். சில இடங்களில கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தற்போது 13 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இது பின்னர் மாறுபடலாம்’’ என்றார்.

தமிழகத்தில் இந்த புயலுக்கு ‘ரெட் அலர்ட்’ கொடுக்கப்பட்டிருக்கிறது போன முறை கொடுத்த ரெட் அலர்ட்டுக்கு பின் அரசியல் இருந்ததாக சொன்னார்கள். அதை நினைத்து இந்த ரெட் அலர்ட்டை அலட்சியப்படுத்தி விடக்கூடாது. ஆம். இந்த நேரத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் சிவப்பு எச்சரிக்கை- ‘ரெட் அலர்ட்’ சூறாவளியுடன் தொடர்புடையது மற்றும் சுழற்சியில் 24 மணி நேரத்திற்குள் 200 மில்லி மழையைச் சுழற்றி அடிக்க முடியும், இதனால் அது எளிதில் கடந்து செல்லும், எனவே சிவப்பு எச்சரிக்கையில் ஆச்சரியம் இல்லை. கடலூர் மற்றும் கடலூர் பகுதிகளிலும், அருகிலுள்ள இடங்களிலும் நிலச்சரிவு மிகுந்த மழைவீழ்ச்சியைக் காணலாம். தமிழ்நாட்டிலும், மேற்கு தமிழ்நாட்டிலும் பிறகு அரபியக் கடலுக்கு சூறாவளி நகரும் போது. குன்னூர், கெட்டி, கோடநாடு மற்றும் கோத்தகிரி பகுதிகளிலும் நீலகிரி பகுதிகளிலும் நவம்பர் 15, 16 ம் தேதிகளில் மிகவும் கவனத்துடன் இருக்கவேண்டும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top