காஷ்மீரில் இந்திய இராணுவம் அத்துமீறல்;பொதுமக்கள் மீது பெல்லட்ஸ் குண்டு தாக்குதல் இருவர் பலி

காஷ்மீரிய விடுதலையை வலியுறுத்தி காஸ்மீர் மக்கள் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்திவருகிறார்கள். இந்திய இராணுவத்தின் ஒடுக்குமுறையால் பல இழப்புகளை சந்தித்து வருகிறார்கள். காஸ்மீரில் நடக்கும் உண்மையான செய்திகளை இந்திய மற்றும் இந்திய சார்பு வெளிநாட்டு ஊடகங்கள் மறைத்து வருகிறது என்ற குற்றசாட்டு வலுத்துவருகிறது.

உரிமைக்காக போராடும் மக்களை தீவிரவாதியாக இந்திய ஊடகங்கள் கட்டமைக்கின்றன.நேற்று இந்திய இராணுவம் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கிறார்கள் என்று சொல்லி மக்கள் வாழ்விடங்களில் அத்துமீறி நுழைந்து பொதுமக்கள் மீது தாக்குதல் தொடுக்குகிறார்கள்.

அப்படிதான் நேற்று,சோபியன் மாவட்டத்தில் உள்ள சைனாபொரா [Zainapora ] பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இராணுவம், காஷ்மீரின் விடுதலைக்காக மிக தீவிரமாக போராடி கொண்டிருக்கும் தோழர்களின் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதலை நடத்தியுள்ளது.

இராணுவத்தின் இந்த கடுமையான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் காஷ்மீரிய விடுதலை போராளிகள் இத்ரீஸ் சுல்தான் [Mohammad Idrees Sultan ]மற்றும் அமீர் உசைன் ராவுத்தர் [Amir Hussain Rather] என்னும் இரண்டு தோழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்று(06/11/18) மாலை நடைபெற்ற தோழர் Mohammad Idrees யின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான காஷ்மீரிய பொது மக்கள் கலந்து கொண்டு காஷ்மீரிய விடுதலையை வலியுறுத்தியும், இந்திய இராணுவத்தின் ஒடுக்குமுறையை கண்டித்தும் முழக்கம் எழுப்பினர்.

இந்திய இராணுவத்தின் தொடர் திட்டமிட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலை கண்டித்து குல்காம் மாவட்டத்தில் உள்ள குத்வாணி [Khudwani] பகுதி மக்களும் போராட்டம் நடத்தினர்.

போராடிய மக்களின் மீது இந்திய இராணுவம் கடுமையான கண்ணீர் புகை குண்டு தாக்குதலையும் பெல்லட்ஸ் குண்டு பயங்கரவாத தாக்குதலையும் நடத்தியுள்ளது. இது குறித்து இந்திய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்துவருகிறது.

இராணுவத்தின் இந்த அயோக்கியத்தனமான தடைசெய்யப்பட்ட பெல்லட்ஸ் குண்டு தாக்குதலில் காஷ்மீரிய அப்பாவி பொது மக்கள் 5 பேர் கடுமையான காயம் பட்டு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பந்திப்பூரா மாவட்டத்தில் உள்ள குதாசத்ரி [Kuta Sathri] கிராமத்திற்குள் நுழைந்த இந்திய இராணுவம், ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று அத்துமீறிய தேடுதல் வேட்டையை நடத்தியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top