வடகிழக்கு பருவமழை; பலத்த காற்று! மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் மிகவும் தாமதமாக தொடங்கியது. கடந்த 1-ந் தேதி தொடங்கி பெய்த மழை பிறகு காணவில்லை. தீபாவளி அன்று கனமான மழை இருக்கும் என்று சொன்னார்கள்.மழை வந்தபாடில்லை. தற்போது வானிலை மாற்றம் வலுவடைந்து இருக்கிறது.

இந்த நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

.
தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியில் புயல் கரையைக் கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலத்த காற்று வீசக்கூடும் நிலையில், வடகிழக்கு பருவமழை மேலும் வலுப்பெறும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே, மீனவர்கள் மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் இன்றைக்குள் கரை திரும்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top