பிரதமர் மோடியை ‘பறவை எச்சம்’ என ட்விட்டரில் கேலி செய்த முன்னாள் நடிகை; பாஜக கடும் கண்டனம்.

பாஜக வின் செயல்களால் நாளுக்கு நாள் மக்கள் துன்பம் அடைகிறார்களோ இல்லையோ பாஜக கேலி செய்யப்படுவது தொடர்கிறது.

சமீபத்தில் குஜராத்தில் மோடி காங்கிரசின் தலைவராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் சிலையை திறந்துவைத்தார்.குஜராத்தில் படேல் சமூகத்தினரால் பின்னடைவு ஆகிக்கொண்டு இருக்கும் பாஜக படேல் சிலையை திறந்து, தன்னை குஜராத்தில் தக்கவைத்துக்கொள்ள ஒரு உத்தியாக கையாளுகிறது என்று பல விமர்ச்சனங்கள் இருந்தாலும் பாஜகாவில் சிலைவைத்து பாராட்ட ஒரு ஆள் கூட இல்லையோ என கிண்டல் பேச்சும் வைரலாகிக்கொண்டு இருக்கிற இந்த சூழலில், புதிய சர்ச்சை ஒன்று கிளம்பி இருக்கிறது

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நடிகை திவ்யா ஸ்பந்தனா பிரதமர் நரேந்திர மோடி குறித்த ட்விட்டர் பதிவு ஒன்றுதான் அந்த சர்ச்சை.

ஒற்றுமையின் சிலை என்று வர்ணிக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் உலகின் மிகமிகப்பெரிய சிலையின் பாதத்துக்குக் கீழ் நரேந்திர மோடி நின்று கொண்டிருக்கும் படத்தை தன் ட்விட்டரில் பதிவிட்ட திவ்ய ஸ்பந்தனா பெரிய சிலையின் மிகப்பெரிய பாதங்களுக்கு அருகில் சிறிய உருவமாக பிரதமர் மோடி நின்று கொண்டிருப்பதை, “அது என்ன பறவை எச்சமா?” என்று கேலி செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலுக்கான 182 மீ உயரச் சிலையை 52 இன்ச் மார்பளவு கொண்ட பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.என கேலி ட்வீட்கள் மத்தியில் பிரதமரின் புகைப்படத்தில் தெரிந்த சிறிய உருவத்தை வைத்து கேலி செய்த திவ்யாவின் ட்வீட் 3800 லைக்குகளையும் 1200 மறு ட்வீட்களையும் பெற்று வைரலாகியது

நெட்டிசன்கள் பலர் இது நகைச்சுவை உணர்வென்று பாராட்ட, மற்ற சிலர் இது ஒரு நாட்டின் பிரதமருக்கு நிகழும் மிகப்பெரிய இன்சல்ட் என்றும் திவ்யாவைத் தாக்கியும் உள்ளனர்.

இதனையடுத்து பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், திவ்யா ஸ்பந்தனாவை விமர்சித்து, இது சர்தார் படேல் மீதான வரலாற்று ரீதியான இழிவு, மோடி மீதான வெறுப்பு என்றும் விமர்சித்துள்ளது .
மற்றும் பாஜகவினர் முன்னால் நடிகையை பெண் என்றும் பாராமல் திட்டுவதும்,அநாகரிகமாக பேசுவதும் தொடர்கிறது.பதிலுக்கு காங்கிரஸ்காரர்கள் பாஜகவின் கீழ்த்தரமான வார்த்தைகளுக்கு பதிலடியும் கொடுக்கிறார்கள் .

கடந்த செப்டம்பரில் பிரதமர் மோடியை அவதூறாகப் பேசியதற்காக திவ்யா ஸ்பந்தனா மீது தேசவிரோத வழக்குத் தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top