இலங்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றுள்ளார்

இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்திற்கு சிரிசேனா –ராஜபக்சே கூட்டணியால் பெரும் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

கடந்த 17 ந்தேதி இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியா வந்து பிரதமர் மோடியை சந்தித்த நிலையில், “இந்திய உளவு அமைப்பான ‘ரா’ என்னை கொலை செய்யத் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது” என குற்றச்சாட்டை அதிபர் சிறிசேனா கூறினார்

‘‘இந்தியா – இலங்கை இடையே குழப்பத்தை ஏற்படுத்த சில முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்திய உளவு அமைப்பான ரா எனப்படும் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு பிரிவு என்னைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்தத் திட்டம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிந்திருக்க வாய்ப்பில்லை’’ எனவும் கூறினார்.

இதுகுறித்து விரிவாக விசாரணை செய்த பிறகே பதில் தெரிவிக்க முடியும் என இலங்கை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இலங்கை அரசியலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (UPFA) க்கும் பெரும் சிக்கல் ஏற்பட்டது.இந்த நிலையில் திடீரென இலங்கை அதிபர் சிறிசேனா இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை பதவிலிருந்து நீக்கி உத்தரவு அளித்துள்ளார்.

இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவிற்கு இன்று பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இது இலங்கையின் அரசியலமைப்பு 19 வது திருத்தச் சட்டத்திற்கு எதிரானது என்று சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இலங்கையில் நடைபெற்ற கடந்த தேர்தலின்போது ராஜபக்சே தமிழர்களை இனப்படுகொலை செய்ததின் காரணமாக படு தோல்வியடைந்தார். இதனால் சிறிசேனா அதிபராக பதவி ஏற்றார். ரணில் விக்ரமசிங்கே பிரதமாக பதவி ஏற்றார்.

ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சே அரசு ஏராளமான பொருளாதார பின்னடைவுகளையும் இலங்கைக்கு ஏற்படுத்தி இருந்தது.இலங்கையை பொருளாதாரப் பின்னடைவிலிருந்து மீட்க போவதாக வாக்குறுதி கொடுத்து ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவி ஏற்றார். அதன் பின்னர் கடல் துறைமுகங்களை இந்தியா மற்றும் சீனாவிற்கு கொடுப்பதில் இரு நாடுகளுக்கும் இடையே சிக்கல் இருந்தது. இது நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், இன்று அதிபர் சிறிசேனா முன்னிலையில் திடீரென ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றுள்ளதும், சீனாவின் விசுவாசியாகிய . ராஜபக்சே பிரதமர் பதவியை சட்டத்திற்கு புறம்பாக பெற்றுள்ளது பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

ராஜபக்சே கட்சியும் சிறிசேனா கட்சியும் சேர்ந்து 95 இடங்களையும் ரணில் விக்கிரமசிங்கவின் கட்சிக்கு [யூ.என்.பி.க்கு] 106 இடங்கள் உள்ளதாகவும்.அனால் இது குறித்து ரணில் எந்தவிதமான பதிலும் கொடுக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

.எப்படியோ சீனாவின் விசுவாசியாகிய ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றியிருப்பது இலங்கை அரசியலமைப்பு 19 வது திருத்தச் சட்டத்திற்கு எதிரானது என்று மட்டும் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top