மீண்டும் இலங்கை கடற்படையினர் அத்துமீறல்;தமிழக மீனவர்கள் 5 பேர் சிறைபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்களை இலங்கை கடற் படையினர் கைது செய்தனர்

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர்.

நெடுந்தீவு அருகே நேற்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த அவர்களிடம், தங்கள் கடற் பகுதிக்குள் மீன்பிடிக்கக் கூடாது என எச்சரித்த இலங்கை கடற் படையினர், ஒரு விசைப் படகை பறிமுதல் செய்து அதில் இருந்த சின்னையா, சுப்பிரமணி, மாரிமுத்து, பழனி, செல்வம் ஆகிய 5 மீனவர்களை சிறை பிடித்தனர்.

5 மீனவர்களும் யாழ்ப்பாணம் மீன்வள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதே போன்று நேற்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களின் 10-க்கும் மேற்பட்ட படகுகளின் வலைகளை அறுத்த இலங்கை கடற்படையினர் அவற்றை கடலுக்குள் மூழ்கடித்தனர்.
இந்திய எல்லைக்குள் மீன் பிடித்தாலும் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது அத்துமீறலை ஏவுகின்றனர். தமிழக மற்றும் இந்திய அரசுகள் கைகட்டி வேடிக்கைப்பார்ப்பது வேதனை அளிக்கிறது.எங்களது வாழ்வாதாரம் நசுக்கப்படுவதை இந்த அரசுகள் காக்கவில்லை என்றால் இது யாருக்கான அரசு?என மீனவ மக்கள் கொதித்தெழுந்து பேசுகிறார்கள். அவர்கள் பேச்சில் நியாயம் இருப்பதுதான் உண்மை!


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top