சென்னையில் சட்ட ஒழுங்கு பாதிப்பு! தலைதூக்கும் ரவுடிகள்; 4 நாட்களில் 3 தொடர் கொலைகள்

சென்னையில் சட்ட ஒழுங்கு மிகவும் பாதிப்படைந்து இருக்கிறது. மீண்டும் ரவுடிகள் தலைதூக்கத் தொடங்கியுள்ளனர். மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களில் 3 கொலைகள் நடந்துள்ளன. நேற்றும் நட்ட நடுச் சாலையில் காங்கிரஸ் பிரமுகர் கொல்லப்பட்டுள்ளார்.

சென்னை ஐஸ் ஹவுஸ் பெசன்ட் சாலையில் ரியல் எஸ்டேட் மற்றும் டிராவல்ஸ் நிறுவனம், பாஸ்ட் ஃபுட் கடையையும் நடத்தி வந்தவர் அப்பாஸ் (40). காங்கிரஸில் அப்பகுதி இளைஞர் அணிச் செயலாளராகப் பதவி வகித்து வந்தார்.

இவரும் இவரது நண்பர்கள் சிலரும் கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் பெல்ஸ் சாலையில் தாக்கப்பட்டனர். இதில் அப்பாஸுக்கு கத்தியால் காயம் உண்டானது. அதன் பின்னர் அப்பாஸ் வழக்கம்போல் தனது பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் ஐஸ் ஹவுஸ் பெசன்ட் சாலையில் உள்ள தனது பாஸ்ட் ஃபுட் கடை அருகில் உள்ள டீக்கடை அருகே அப்பாஸ் நின்று கொண்டிருந்தார்.

அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் அப்பாஸை சூழ்ந்துகொண்டு வெட்ட முனைந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்து தப்ப முயன்றார். ஆனாலும் அந்தக் கும்பல் அவரைச் சூழ்ந்துகொண்டு சரமாரியாக பின்னந்தலையில், கழுத்தில் வெட்டியது.

இதில் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் அப்பாஸ் விழுந்தார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர். அப்பாஸை வெட்டியவர்கள் சாவகாசமாக அங்கிருந்து தப்பிச் சென்றனர். தகவலறிந்து வந்த ஐஸ் ஹவுஸ் போலீஸார் அப்பாஸை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனாலும் சிகிச்சை பலனின்றி அப்பாஸ் பலியானார். இந்த கொலைச் சம்பவம் குறித்து ஐஸ் ஹவுஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர். ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் உள்ள மயிலாப்பூர் துணை ஆணையர் காவல் மாவட்டத்தில் கடந்த 19-ம் தேதிமுதல் 3 நாட்களில் 3 கொலைகள் நடந்துள்ளன.

போலீஸின் அசட்டைத்தனமே இதற்கு காரணம் என பொதுமக்கள் கூறுகிறார்கள். கையில் சிக்கிய ரவுடிகள் சிலரை விசாரிக்காமல் விடுவதும்,சட்டஒழுங்கை சரியாக பாதுகாக்காததும் இதற்கு காரணம்.

மற்றும் அரசியல்வாதிகள் பேச்சை கேட்டு ரவுடிகளை விட்டுவிடுவதும் அரசியல்வாதிகளுக்காக சாதாரண மக்களை மிரட்டுவதற்கும்தான் போலிஸ்ஸார் பயன்படுத்தப்படுகிறார்கள்

மக்கள் பிரச்சனைகளை பேசும்,மக்களுக்காக போராடும் இயக்கங்கள் மீது தேவையில்லாத ஒடுக்குமுறைகளை அரசியல்வாதிகளுக்காக ஏவுவதும். அரசியல் இயக்கங்கள் மீது ஒட்டுமொத்தக்கவனத்தையும் போலிஸ் குவித்து இருப்பதாலும். ரவுடிகளின் ராஜ்ஜியம் பெருகிவிட்டது.

இனியாவது போலிஸ் உயர் அதிகாரிகள் சட்டஒழுங்கை பாதுகாக்க தங்கள் கவனத்தை செலுத்தவேண்டும். ரவுடிகள்போல் செயல்படும் எச். ராஜா போன்ற அரசியல் தலைவர்கள் பேச்சை கேளாதிருக்கவேண்டும். தொடர் கொலைகளைத் தடுக்க போலீஸார் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top