சென்னை ஐகோர்ட்டில் எச்.ராஜா தலைகுனிந்து நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.

“ஐகோர்ட்டாவது மயிராவது” என்று நீதித்துறையை மிகக்கேவலமாக பேசிய பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜா ஐகோர்ட்டில் நீதிபதிகள் முன்பு ஆஜராகி தலைகுனிந்து நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மெய்யபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த திருமயம் போலீஸார் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து போலீஸாரின் ஆலோசனையுடன் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்தது.

இதன்படி,மெய்யபுரத்தில் உள்ள மகாமாரியம்மன் கோயிலில் விநாயகர் சிலை வைக்கப்பட்டது தொடர்ந்து, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமையில் விநாயகர் ஊர்வலம் தொடங்கியது.

அப்போது, பொன்னமராவதி டிஎஸ்பி தமிழ்மாறன், திருமயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் உள்ளிட்டோர் தேவாலயம் வழியே ஊர்வலம் சென்றால் சட்டம் ஒழுங்கு பாதிக்கக்கூடும் என்பதால், வேறு வழியாக ஊர்வலம் நடத்துமாறு கேட்டுக்கொண்டனர்.

இதை மறுத்த எச்.ராஜா, திட்டமிட்டபடி அதே வழியில்தான் செல்வோம் என்றார். அதற்கு போலீஸார் ஐகோர்ட் ஆணைப்படிதான் ஊர்வலம் நடத்தவேண்டும் தேவையில்லாமல் பிரச்சனை செய்யாதீர்கள் என கூறவும். அப்போது, பாஜக தேசியத்தலைவர் என சொல்லப்படும் எச்.ராஜா “ஐகோர்ட்டாவது மயிராவது” என்றும் காவல்துறை உயர் அதிகாரி டி.ஜி.பி மீது லஞ்சம் வாங்கிய விசாரணை குறித்தும் படு கேவலமாக விமர்சித்து பேசினார். அந்த உரையாடலின் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. எச்.ராஜாவின் பேச்சுக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்

இந்நிலையில், எச்.ராஜா, இந்து முன்னணி மாநிலப் பொருளாளர் பழனிவேல்சாமி, புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் கற்பக வடிவேல், சிவகங்கை மாவட்டச் செயலாளர் அக்னி பாலா, மெய்யபுரம் ஒருங்கிணைப்பாளர் கணேசன், பாஜக சிவகங்கை மாவட்டச் செய லாளர் ரமேஷ் உள்ளிட்ட 18 பேர் மீது திருமயம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

பெரிய எதிர்ப்பு வந்ததும் “நீதிமன்றத்தை மதிப்பவன் நான். நீதிமன்றம் குறித்து நான் பேசியதை குரல் எடிட் செய்து பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். இதுபோன்று தொடர்ந்து பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என எச்.ராஜா தாம் பேசவில்லை” என திடீரென பல்டி அடித்து மறுத்து வந்தார்.

இப்படி இவர் பேசுவதும் அல்லது முகநூலில் கொச்சையாக எழுதுவதும் பின்பு மறுப்பதும் கலாச்சாரமாக கொண்டவர். இவர் மதங்களுக்கிடையே கலவரத்தை ஏற்படுத்தி சாதிகளுக்கிடையே பிளவு ஏற்படுத்தி தான் சார்ந்த இந்து மதத்தை வளர்க்க துடிக்கும் ஒரு போக்கிரித்தனத்தைக் கொண்டவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான்.

பின்பு ,இதுகுறித்து ஐகோர்ட்டு மூத்த நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான அமர்வு, தாமாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கை எச்.ராஜாவுக்கு எதிராக பதிவு செய்தது எச்.ராஜாவுக்கு நோட்டிஸ் அனுப்பியது.

அதில், காவல்துறை, நீதித் துறையை விமர்சித்தது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும், 4 வாரத்துக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் இது போன்ற விவகாரங்களை என்றும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எச்.ராஜாவை ஆஜராக சிடி.செல்வம் அமர்வு உத்தரவிட்டிருந்ததை அடுத்து நேற்று எச்.ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.டி.செல்வம், நிர்மல் குமார் அமர்வு முன் ஆஜரானார்.

காலையில் நீதிமன்றம் வந்ததும் வழக்கறிஞர்கள் அமரும் இடத்தில் எச். ராஜா அமர்ந்துகொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த மற்ற வழக்கறிஞர்கள் அவரை “குற்றவாளிகள் நிற்கவேண்டிய இடத்தில் போய் நில்லும்” என கூறி விரட்டிவிட்டார்கள். அப்போது நீதிபதிகள் உள்ளே வரவும் தலைகுனிந்தபடியே எச். ராஜா நின்று கொண்டு இருந்தார்.நீதிபதிகள் அவர் கொடுத்திருந்த நிபந்தனையற்ற மன்னிப்புக்கோரிய மனுவை எல்லோருக்கும் கேட்கும்படி வாசித்தனர்.

பின்பு, நீதிபதிகள் இதுபோன்ற தவறு எதிர்காலத்தில் இனி நேரக்கூடாது என எச்.ராஜாவுக்கு எச்சரித்து நீதிபதிகள் நீதிமன்ற அவதூறு வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top