ரஷியாவிடம் ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் – பாகிஸ்தான்

ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டி உள்ளது.

நாட்டின் வான்பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை இந்தியா வாங்குகிறது. இது அதிர்ச்சி தரக்கூடிய செய்தி மட்டுமல்ல இந்தியா தனது பொறுப்பை தட்டிக்கழித்து இருக்கிறது.

பாகிஸ்தான் மிகவும் பொறுப்பாக சுட்டிக்காட்டி இருக்கும் இந்த கருத்து உலகநாடுகளிடையே மிகவும் வரவேற்புக்கு உள்ளாகி இருக்கிறது. பாகிஸ்தான் அணு ஆயுத எதிர்ப்பு கருத்தியலை தற்போது வெளிப்படையாக இந்தியா மீது குற்றம் சாட்டியிருக்கிறது. ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு, தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் என்றும், மீண்டும் ஆயுத போட்டிக்கு வழிவகுக்கும் எனவும் கூறியுள்ளது.

இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 1998-ல் இரு நாடுகளும் அணுகுண்டு சோதனை நடத்தியதை தொடர்ந்து, இந்த பிராந்தியத்தில் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்ற பரிந்துரையை பாகிஸ்தான் வைத்ததுடன், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அமைப்பை வாங்கும் இந்தியாவின் முடிவுக்கும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் இந்த பரிந்துரை நிராகரிக்கப்பட்டதால் எந்தவகையான ஏவுகணைகளையும் செயலிழக்க செய்யும் வலிமையை அடைவதற்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது’ என்று கூறப்பட்டு உள்ளது.

மேலும், இந்த பிராந்தியத்தை சீர்குலைக்கும் எந்தவகையான ஆயுதங்களையும் எதிர்க்கும் வலிமை தங்களுக்கு இருப்பதாக பாகிஸ்தான் தொடர்ந்து நம்புவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை பாஜக ஆட்சியில் தோல்வியில் முடிந்திருக்கிறது என்று சமூகவியல் அறிஞர்கள் கூறுவது உண்மையாகிவிடும் போலிருக்கிறது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top