மக்களின் துயரத்தில் பங்கெடுக்காத பாஜக அரசை காப்பற்ற பூரி சங்கராச்சாரியார் ஜனாதிபதிக்கு கோரிக்கை

ராவணன் கொடும்பாவி எரிப்பு பழக்கத்தை ஒழிக்க வேண்டும் – பூரி சங்கராச்சாரியார்

தசரா விழாவின் போது இராவணன் கொடும்பாவியை எரிக்கும் பழக்கம் வட இந்திய மக்களுக்கு பார்பன அதிகாரமையங்கள் சடங்குகளாக பொதுபுத்தியில் திணித்து வைத்திருக்கிறார்கள். ராமனின் புகழைப்பரப்புவதை விட [அப்படி ஒன்று இருந்தால்தானே] இராவணன் கொடுமைக்காரன் என்று மக்களிடம் பரப்பி இந்துத்துவ அதிகாரமையங்களை கட்டமைக்க ஆர்.எஸ்.எஸ்,பஜ்ரங்தல் போன்ற அமைப்புகள் வேலை செய்து வருகிறது.

புராணங்களையோ,இதிகாசங்களையோ, இலக்கியங்களையோ சரியான புரிதலுக்கு வழிவகுக்காமல், இந்திய ஒன்றியத்தின் பன்முகப்பட்ட தன்மையை சொல்லிக்கொடுக்காமல் ஒரே கடவுள் ,ஒரே நாடு என்று படிக்காத, எளிய மக்களை ஏமாற்ற இந்துத்துவம் செய்யும் சூழ்ச்சிதான் இது போன்ற விழாக்கள்.

தென்மாநிலங்களில் இது போன்ற விழாக்கள் நடைபெறுவது மிகவும் குறைவு. இரண்டு நாட்களுக்கு முன் அமிர்தசரஸ் நகரில் நடந்த தசரா விழாவின் போது ராவணன் கொடும்பாவிகளை எரிக்கும் போது நடந்த கோரவிபத்து மன்னிக்கமுடியாதது. இதற்கு மத்திய அரசு பதில் சொல்லாமல் நழுவிச்செல்வது கோழைத்தனம்.

மக்கள் மிகுந்த துயரத்தில் இருக்கிறார்கள். அவர்களது துயரத்தில் பங்கெடுக்காமல் அவர்களது துயரத்தை மேலும் அதிகப்படுத்தும் விதமாக அறிக்கை விட்டு, பேசிவரும் ‘பாஜக அரசு’ மக்களிடமிருந்து விலகிக்கொண்டு இருக்கிறது. இது இந்துத்துவ அரசியலுக்கு எதிராக போய்விடக்கூடும் என்பதை அறிந்து பூரி சங்கராச்சாரியார் ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.அதில் தசரா விழாவின்போது ராவணன் கொடும்பாவிகளை எரிக்கும் பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என பூரி சங்கராச்சாரியார் அதோக்‌ஷஜானந்த் தேவ் திர்த்த் மஹராஜ் வேண்டுகோள் வைத்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜோடா பதக் பகுதியருகே ராவணன் கொடும்பாவி எரிக்கப்படுவதை நின்று வேடிக்கை பார்த்த மக்கள் மீது சமீபத்தில் ரெயில் மோதிய விபத்தில் சுமார் 60 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இந்த கோர விபத்து தொடர்பாக மதுரா நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பூரி சங்கராச்சாரியார் அதோக்‌ஷஜானந்த் தேவ் திர்த்த் மஹராஜ், ‘தசரா விழாவின்போது ராவணன் கொடும்பாவிகளை எரிக்கும் பழக்கத்தை ஒழிக்க வேண்டும்’ என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இதுபோன்ற கொடும்பாவி எரிக்கும் பழக்கத்தை பழமைவாதம் என்று குறிப்பிட்ட அவர், அடிப்படையான இந்து கலாச்சாரத்துக்கு எதிரான இந்த பழக்கம் பஞ்சாப்பில் நிகழ்ந்தது போன்ற சோகத்துக்கும் வழி வகுத்து விடுகிறது என்று தெரிவித்தார்.

இந்து புராணத்தின்படி, இறந்தவர்களுக்கான இறுதிச் சடங்குகள் ஒரே ஒருமுறை மட்டுமே செய்யப்பட வேண்டும். அவ்வகையில், ராவணனின் இறுதிச் சடங்குகளை ராமபிரான் முன்னிலையில் விபீஷணன் செய்து முடித்து விட்டார்.

எனவே, தசரா விழாக்களின்போது இதுபோல் கொடும்பாவிகளை கொளுத்துவதால் பெரிய அளவில் சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படுகிறது. எனவே, இந்த பழக்கம் ஒழிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top