மந்திரி பதவி ஆசை காட்டி பாஜக கோவா சட்டசபையில் இரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுத்தனர்

கோவா சட்டசபையில் அதிக உறுப்பினர்களை பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்கள் இன்று பா.ஜ.க.வுக்கு தாவியதால் ஆளும்கட்சியின் பலம் கூடியுள்ளது.

40 இடங்களை கொண்ட கோவா சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 16 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜ.க.வுக்கு 14 எம்.எல்.ஏ.க்களும் கிடைத்தனர்.காங்கிரஸ் ஆட்சி அமைத்துவிடும் என்ற நிலையில் வழக்கம்போல் பாஜக குறுக்குவழியில் வேலை செய்து அதிக இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரசால் அங்கு ஆட்சி அமைக்க முடியாத நிலையை உருவாக்கியது.

கோவா முற்போக்கு கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள், மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 3 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் அங்கு பா.ஜ.க. ஆட்சியை பிடித்தது.

23 உறுப்பினர்களின் ஆதரவுடன் பா.ஜ.க. தலைமையிலான அரசின் முதல் மந்திரியாக முன்னாள் ராணுவ மந்திரி மனோகர் பரிக்கர் பொறுப்பேற்றுள்ளார். எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருந்து வந்தது

இந்நிலையில், முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் உடல்நலம் பாதிக்கப்பட்டு வெளிநாட்டிலும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார் .

அவர் சிகிச்சை பெற்று வருவதால் புதிய முதல்வரை நியமிக்க வேண்டும் என பாஜகவுக்கு கூட்டணிக் கட்சிகள் மிரட்டல் விடுத்து வந்தன.. இதனால் அந்த கட்சிகளை ‘வளைக்கும்’ முயற்சியில் காங்கிரசும் ஆட்சியை தக்கவைக்க பாஜகவும் ஈடுபட்டு வந்தன. அதே சமயம் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும் பெரிய தொகையும் மந்திரி பதவியும் என்று சொல்லி எதிரணியை சேர்ந்த எம்எல்ஏக்களை இழுக்கும் வேலையில் அமித்ஷா தலைமையில் ஈடுபட்டது. .

பாஜகவின் தீவிர முயற்சியால் தொகுதி மக்களைப்பற்றி கவலைகொள்ளாமல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சுபாஷ் ஷிரியோட்கர் மற்றும் தயாநந்த் சோப்டே ஆகியோர் இன்று டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷாவை சந்தித்து தங்களை அக்கட்சியில் இணைத்து கொண்டனர்.

அவர்கள் செல்லும் முன்பாக கோவா அமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான விஸ்வாஜி ரானே டெல்லி புறப்பட்டுச் சென்றார். தனிப்பட்ட காரணங்களுக்காக டெல்லி செல்வதாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, டெல்லியில் பாஜக தலைவர் அமித் ஷாவை அவர்கள் இன்று சந்தித்து பேசினர். பின்னர் காங்கிரஸில் இருந்து விலகுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். விரைவில் அவர்கள் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் காங்கிரஸ் தலைமை அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
கட்சி மாறியவர்களின் எம்.எல்.ஏக்கள் பதவி பறிக்கப்படுமா? இல்லை, அதை பாஜக சட்டத்தை வளைத்து காப்பற்றி விடுமா என்ற கேள்வியோடு தொகுதிமக்கள் அலைகிறார்கள்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top