தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது மீண்டும் வழக்கு! ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எதிராக பேச்சு!!

கடந்த மாதம் 26-ந்தேதி சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சு தொடர்பாக வேல்முருகன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல் முருகன் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து, மக்களை பார்க்க சென்றவரை போலிஸ் கைது செய்தது. பிறகு அவர் மீது சுங்கச் சாவடியை தாக்கியதாக வழக்கு போட்டது. அதன் பிறகு அவர் மீது தேசத்துரோக வழக்கும் பதிவு செய்தது இதில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.

இந்த நிலையில் வேல் முருகன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 26-ந்தேதி சேப்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வேல்முருகன் பேசினார்.

அவரது பேச்சை அடிப்படையாக வைத்தே திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தது, அரசுக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுதல் உள்ளிட்ட 3 சட்ட பிரிவுகளின் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்களுக்காக குரல் கொடுப்பவர்களை கடுமையாக ஒடுக்க அரசு துணிந்து விட்டது.பாஜக அரசையும் அதனுடைய கைப்பாவையாக இருக்கும் தமிழக அரசையும் எதிர்த்து யார் பேசினாலும் வழக்கு பதிவு செய்து கைது பண்ணிவிடுவது என முடிவு எடுத்து இருக்கிறது.காவல்துறையை அரசு தனக்கான ஏவல்படை போல் செயல்பட வைத்திருக்கிறது.மக்கள் பாதுகாப்புக்கும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை தடுக்கவும் செயல்படவேண்டிய காவல்துறை அரசை பாதுகாக்க அரசை எதிர்த்து பேசுபவர்கள் மீது தினசரி வழக்கு பதிவு செய்கிறது.இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top