அமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரம்; அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சவுதி செல்கிறார்

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ பத்திரிகையாளர் ஜமால் மாயமான நிலவரத்தைத் அறிந்துக் கொள்ள சவுதி செல்ல இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசை விமர்சித்தும் குறிப்பாக அதன் இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்தும் கட்டுரைகளை எழுதி வந்தவர் ஜமால்.

இந்த நிலையில் துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில், இரு வாரங்களுக்கு முன்னர் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்றவர் மாயமானார்.
இந்த சூழலில் இவ்வழக்கு தொடர்புடைய சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டு ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறி வந்த நிலையில் வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஜமால் கொலை செய்யப்பட்டது உறுதியானால் கடுமையான தண்டனைகளுக்கு சவுதி உள்ளாக்கப்படும் என்று எச்சரித்தார். பிரிட்டன் ஐக்கிய நாடுகள் சபை சவுதியை விமர்சித்தன.

தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வந்த சவுதி, எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதைவிட கடுமையான எதிர்வினையை உலக நாடுகள் சந்திக்க நேரிடும் என்று தெரிவித்தது.

இந்த நிலையில் ஜமால் விவாகாரம் தொடர்பாக சவுதி அரசரிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் பேசினார். இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில்,”சவுதி தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. மேலும் ஜமால் மாயமான விவகாரத்தில் விடையை தேட சவுதி துருக்கியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. நான் இது தொடர்பாக நமது வெளியுறவு அமைச்சரை சவுதி மன்னர் சல்மானை சந்திக்க அனுப்ப இருக்கிறேன்” என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top