ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம்; டசால்ட்-ரிலையன்ஸ் ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு அம்பலம்

ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் டசால்ட்-ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமி டெட்(டிஆர்ஏஎல்) நிறுவனத்தின் 2016-17 ஆண்டறிக்கையில் ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ள தகவல் அம்பலமாகி உள்ளது.

இந்திய விமானப் படையின் தேவைக்காக 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க பிரான்ஸைச் சேர்ந்த டசால்ட் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென அரசு வலியுறுத்தியதாகச் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.

இதற்கான ஒப்பந்தம் 2016 செப்டம்பரில் கையெடுத்தானது. இதன் மதிப்பு ரூ. 59 ஆயிரம் கோடி. இந்த மதிப்பில் 50 சதவீதத்தை, அதாவது ரூ. 30 ஆயிரம் கோடியை, இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி, சேவைகள் ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டுமென இந்திய அரசு கேட்டுக்கொண்டது.

ஆனால், இந்த ரூ. 30 ஆயிரம் கோடியும் டிஆர்ஏஎல் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுவிட்டதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இதனை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்தார். ரூ. 30 ஆயிரம் கோடி மதிப்பில் 10 சதவீதம் மட்டுமே டிஆர்ஏஎல் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டதாகக் கூறினார். அதாவது ரூ. 3000 கோடி. பிரான்ஸ் டசால்ட் நிறுவனமும் இதை உறுதிபடுத்தியது.

ஆனால் ரிலையன்ஸ் குழுமம் கடந்த செப்டம்பரில் வெளியிட்ட அறிக்கையில் ரூ. 6,600 கோடி முதலீடு பெறப்பட்டதாக அறிவித்தது. இது பத்து சதவீதத்தைவிட 2 மடங்கு. இந்த நிலையில் ரிலையன்ஸ் குழுமத்தின் 2016-17 நிதி ஆண்டுக்கான அறிக்கையில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்டு செய்யப்பட்டுள்ள தகவல் இடம் பெற்றுள்ளது. ஆனால், 2017-18 நிதி ஆண்டுக்கான அறிக்கையில் இதுகுறித்த விவரங்கள் எதுவும் இல்லை.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top