நக்கீரன் கோபால் மீது மீண்டும் வழக்குப் பதிவு செய்ய முயற்சி; ஆளுநருக்கு வைகோ எச்சரிக்கை

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் மீது செக்ஸ் வழக்கில் கைதான நிர்மலாதேவி தொடர்பு குறித்து நக்கீரன் இதழ் கடந்த மூன்று இதழ்களில் புலனாய்வு செய்து செய்தி வெளியிட்டு இருந்தது, மற்றும் சிறைச்சாலையில் இருக்கும் நிர்மலா தேவி உயிருக்கு ஆபத்து குறித்தும் செய்தி வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நக்கீரன் கோபால் அவர்கள் கவர்னர் மாளிகை புகார் அளித்ததன் பெயரில் கைது செய்யப்பட்டார். எழும்பூர் நீதிமன்றம் பொய்யான வழக்கு, இது பொருந்தா வழக்கு என்றும் நக்கீரன் கோபாலை விடுவித்தது.

நிர்மலாதேவி, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் இருவருக்குமிடையான இந்த செய்தி அதன் பிறகு இந்தியாவெங்கும் பரவத் தொடங்கியது.எல்லா ஆங்கில நாளிதழ்களிலும் தலைப்பு செய்தியாகவே தமிழக கவர்னர் இருந்தார். இவ்வளவு அசிங்கப்பட்ட பிறகும் அமைதியாக இல்லாமல் வழக்கறிஞர்களைக் கொண்டு வழக்கை வேறு மாதிரியாகப் போட்டு, நக்கீரன் கோபாலை எப்படி சிறைக்கு அனுப்பலாம் என்று நேற்றைக்கு ஆலோசனை செய்திருக்கிறார்

இதை ‘’ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். விபரீத விளையாட்டில் ஈடுபட வேண்டாம் என வைகோ எச்சரித்துள்ளார்.’’

கொடைக்கானல் நகரச் செயலாளர் தாயகம் கா.தாவூர் மகன் திருமணத்தில் கலந்துகொண்ட பின் வத்தலகுண்டில் செய்தியாளர்களிடம் இன்று வைகோ பேசியதாவது:

“தொழில் முனைவோர் அனைவரும் ராஜ்பவனுக்கு வந்தால் தொழில் தொடங்க ஏற்பாடு செய்து தருகிறேன் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியதற்கு, நீங்கள் என்ன புரோக்கர் வேலை பார்க்கிறீர்களா? என்று அன்றைக்குக் கேட்டேன்.

வழக்கறிஞர்களைக் கொண்டு வழக்கை வேறு மாதிரியாகப் போட்டு, நக்கீரன் கோபாலை எப்படி சிறைக்கு அனுப்பலாம் என்று நேற்றைக்கு ஆலோசனை செய்திருக்கிறார் புரோஹித். எந்த வழக்கறிஞர் என்ற பெயரைச் சொல்ல விரும்பவில்லை. அதே வழக்கறிஞர் முதல்வரையும் சந்தித்து ஒரு மணி நேரம் உரையாடி இருக்கிறார்.
தமிழக ஆளுநருக்கும், முதல்வருக்கும் எச்சரிக்கை செய்கிறேன், நக்கீரன் கோபால் தனிநபர் அல்ல. பத்திரிகை – தொலைக்காட்சி ஊடகப் பிரதிநிதி. பத்திரிகை – தொலைக்காட்சி குரல் வளையை நெரிக்க முயல வேண்டாம். உங்களைவிட சர்வ வல்லமை பெற்ற பாசிச அரசுகள் மண்ணோடு மண்ணாகப் போயிருக்கின்றன. விபரீத விளையாட்டில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கிறேன்.”

இவ்வாறு வைகோ தனது பேட்டியில் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top