மதுரை உயர்நீதிமன்றம் கீழடி பொருட்களை மத்திய தொல்லியல் துறையிடம் கொடுக்க தடை விதித்தது

சிவகங்கை மாவட்டம் கீழடியில் என்ற இடத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொல்லியல் அகழ்வாய்வு பணி நடந்து வருகிறது. ஆய்வு தொடர்பாக அதன் முதன்மை தொல்லியல் அறிஞர் அமர்நாத் சிறப்பாக இரண்டுமுறை ஆய்வு பணி மேற்கொண்டு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்களை கண்டுபிடித்தார்..அவைகள் தமிழரின் தொன்மையான நாகரிகத்தை பறைச்சாற்றியது.கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் பின்பான காலகட்டத்தில் தமிழர்கள் எந்தவிதமான மதச் சார்பின்றி உலகின் மிக தொன்மையைய நாகரிகத்தில் வாழ்ந்தனர் என்று அவரது ஆய்வில் கூறினார். எந்தவிதமான மதம் சார்ந்த பொருட்களும் கிடைக்கவில்லை என்றும் அமர்நாத் கூறினார் உடனடியாக திடீரென தொல்லியல் அறிஞர் அமர்நாத் பாஜக அரசால் அசாம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார்.

மட்டுமின்றி, அவர் இது குறித்து எந்த விதமான அறிக்கையும் கொடுக்க கூடாது என்று சமீபத்தில் பாஜக அரசால் துறைசார்ந்து நிர்பந்திக்கப்பட்டார். இந்த நிலையில், மதுரை உயர்நீதிமன்றம் இன்று தொல்லியல் அறிஞர் அமர்நாத் அக்டோபர் 31ம் தேதி தனது அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தது

மேலும்,கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால தொன்மை வாய்ந்த பொருட்களை பெங்களூரில் உள்ள மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளரிடம் வழங்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை இன்று தடை விதித்தது.

மதுரை ஹைகோர்ட் கிளையில் கனிமொழிமதி, பிரபாகர் பாண்டியன் ஆகியோர் கீழடி அகழ்வாய் தொடர்பாக வழக்குத் தொடுத்து இருந்தனர்

நீதிபதிகள், சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு முன்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக தமிழக அரசும், தொல்லியல் துறையும் பதில் மனுவை தாக்கல் செய்திருந்தனர். விசாரணைக்குப் பின்னர் மாலையில் பிரபாகர் பாண்டியன் மனு மீது ஒரு உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர். அதன் முக்கிய அம்சங்கள்:

கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை மத்திய தொல்லியில் துறையிடம் கொடுக்கக் கூடாது.

அகழாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட எந்தப் பொருளையும் பெங்களூர் தொல்லியல் துறை கண்காணிப்பாளரிடம் தரக் கூடாது.

கொடுத்த ஆக வேண்டும் என்றால், தமிழக தொல்லியல் துறை ஆணையரிடம் ஒப்படைக்கலாம்.

அகழாய்வு தொடர்பான அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை அக். 31க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மத்திய தொல்லியல் துறை இயக்குநர் விளக்கம் அளித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

வழக்கு விசாரணை அக்டோபர் 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.என்று உத்தரவு பிறப்பித்தார்

முன்னதாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், கீழடியில் 4வது கட்ட அகழாய்வு கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடத்தி முடிக்கப்பட்டது. கீழடி அகழாய்வில் தங்க ஆபரணங்கள் கிடைத்துள்ளன. 4வது கட்ட அகழாய்வில் கீழடியில் இருந்து பழமையான 7,000 பொருட்கள் கிடைத்தன. பழங்கால விலங்குகளின் எலும்புகள், மீன் உருவம் பொறித்த பானைகள் கிடைத்துள்ளன. கீழடியில் கிடைத்துள்ள பழம் பொருட்களை, அமெரிக்காவிற்கு ஆய்வுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம். அமெரிக்காவின், கலிபோர்னியாவில் உள்ள ஆய்வு மையத்திற்கு பொருட்கள் அனுப்பப்படும். கீழடியில் கிடைத்துள்ள பழம் பொருட்களின் காலத்தை நிர்ணயிக்க இந்த ஆய்வு பயன்படும். கீழடியில் 5வது கட்ட அகழாய்வுக்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தால், 5வது கட்ட, அகழாய்வு பணிகள் மீண்டும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top