காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நேற்று 7 ஆயிரத்து 87 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 8 ஆயிரத்து 848 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

கடந்த 5-ந்தேதி 4 ஆயிரத்து 384 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 7 ஆயிரத்து 87 கன அடியாக அதிகரித்தது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 8 ஆயிரத்து 848 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து நேற்று மாலை முதல் 5 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைவாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நேற்று 103.37 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் அதிகரித்து 103.61 அடியாக உயர்ந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top