வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது புயலாக மாறி ஒடிசா நோக்கி செல்லும். என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மண்டல வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலச்சந்திரன் அளித்த பேட்டி:

“நேற்று அரபிக்கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெற்றுள்ளது. லூபன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்புயல் மேலும் வலுப்பெற்று ஓமன் நோக்கி நகரும்
வங்கக்கடலில் நிலவிவந்த வலுவான காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த இரு தினங்களில் புயலாக வலுப்பெற்று ஒடிஷாவை நோக்கி நகரும்.
இதன்காரணமாக அரபிக்கடல், வங்கக்கடல் மற்றும் இந்தியப்பெருங்கடலில் நிலைகொண்டிருக்கும் புயலின் காரணமாக காற்றின் போக்கு, ஈரப்பதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது

இதனால் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு கடந்த 3 தினங்களாக நிலவிவந்த சாதகமான சூழல் மாறியுள்ளது, நாளை துவங்குவதற்கான சாதகமான சூழல் இப்போது இல்லை

கடந்த 24 மணிநேரத்தில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருப்புவனத்தில் 15 செமீ மழையும், மானாமதுரையில் 13 செமீ மழையும் பதிவாகியுள்ளது

அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழையும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு. சென்னை மற்றும் புறநகரில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. ” இவ்வாறு அவர் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top