அயோத்தியில் ராமர் கோவில் அமைக்க பிரதமருக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் உத்தரவிட வேண்டும் – தொகாடியா

இன்று செய்தியாளர்களை சந்தித்த விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு கோரிக்கைகள் விடுவதற்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் பிரதமருக்கு ஆணையிட்டு இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்து ராஜ்ஜியம் என்பது இஸ்லாமியர்களுக்கு இடமில்லை என்பது பொருள் அல்ல என்ற பகவத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பசுக்களை கொல்பவர்களையும், பாகிஸ்தான் கொடியேந்தி காஷ்மீரில் இருப்பது போன்ற இஸ்லாமியர்கள் இல்லாததே இந்து ராஜ்ஜியம் என தெரிவித்துள்ளார். மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் தற்போது குற்றம்சாட்டியுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என பிரதமர் ஏமாற்றிவிட்டதாக குறிப்பிட்ட தொகாடியா, எஸ்.சி., எஸ்.டி. சட்டப்பிரிவு வந்தபோது அதில் முடிவு எடுக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை எனக்கூறிய பிரதமர் மோடி, அயோத்தி விவகாரத்தில் நீதிமன்றத்தின் முடிவே இறுதியானது என கூறுகிறார் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய பிரவீன் தொகாடியா, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக கோரிக்கைகளை விடுப்பதற்கு பதிலாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் உத்தரவிட்டு இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top