மாநிலங்களவையில் நிறைவேறாத முத்தலாக் மசோதாவை அவசர சட்டமாக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல்;சர்சை!

மாநிலங்களவையில் நிறைவேறாத முத்தலாக் மசோதாவை அவசர சட்டமாக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது சர்சையை ஏற்படுத்தி இருக்கிறது

முத்தலாக் தண்டனைக்குரிய குற்றம் என அறிவித்து அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

முத்தலாக் தொடர்பான சட்ட மசோதா மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.சர்சையை கிளப்பி உள்ளது

முஸ்லிம் ஆண்கள் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை சட்டவிரோதம் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நடைமுறைக்கு மாற்றாக புதிய சட்டத்தை இயற்ற மத்திய அரசை அறிவுறுத்தியது.

அதன்படி கடந்த 28-ம் தேதி முத்தலாக் தடை மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா அவசர கதியில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் பல்வேறு குழப்பங்கள் இருப்பதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

எனினும் மக்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ளதால் கடும் எதிர்ப்புகளுக்கு நடுவே அன்றைய தினமே மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் முத்தலாக் நடைமுறையைப் பின்பற்றும் முஸ்லிம் ஆண்களுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டது. எனினும் மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாததால் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.

இதையடுத்து, மசோதாவில் சில திருத்தங்களை செய்ய மத்திய அரசு முன் வந்தது. அதன்படி, முத்தலாக் அளிப்பது சட்டப்படி குற்றம் என்பதும், அதற்காக 3 வருட சிறை, அபராதம் என்பதும் தொடரும். இதில் ஜாமீன் அளிக்க வகை செய்யப்பட்டது. கைதானவரின் மனைவியிடம் விசாரணை நடத்தப்பட்ட பின் மாஜிஸ்டிரேட் குற்றவாளிக்கு ஜாமீன் அளிப்பதை முடிவு செய்வார். இருவர் சம்மதத்துடன் பிரிய விரும்பும் தம்பதிகள் சமரசம் செய்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. எனினும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. அடுத்தகூட்டத் தொடருக்கு மசோதா ஒத்தி வைக்கப்பட்டது.

இந்தநிலையில், மசோதா நிறைவேறும் வரையில் மாற்று ஏற்பாடாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி முத்தலாக் என்பது தண்டனைக்குரிய குற்றம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

வருகிற தேர்தலை முன்னிறுத்தியே பாஜக அரசு அவசர அவசரமாக வேலைத்திட்டங்களை செயல்படுத்துகிறது. . எனினும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாத மசோதாவை இவ்வளவு அவசரமாக சட்டமாக இயற்றி ஒப்புதல் வழங்கப்பட்டது. பெரிய சர்சையை ஏற்படுத்தி இருக்கிறது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top