மே பதினேழு இயக்கம்; திருமுருகன் காந்தி மீதான உபா சட்டத்தை ரத்து செய்தது எழும்பூர் கோர்ட்

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி மீதான சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தை (UAPA) ரத்து செய்து சென்னை எழும்பூர் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சேலம்-சென்னை 8 வழிச்சாலை போராட்டத்தின் போது நடந்த தடியடி ஆகியவை குறித்து ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் பேசினார்.

ஜெனிவாவியிலிருந்து கடந்த 9ந்தேதி பெங்களூரு விமான நிலையம் வந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர்.சைதாப்பேட்டை 11-வது கோர்ட்டில், ஆஜர்படுத்திய போது சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு மறுத்து விட்டார்.

இதையடுத்து, தடையை மீறி ஊர்வலமாக சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த வழக்கில் ராயப்பேட்டை போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர், எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதன் பிறகு அவர்மீது பதினேழு வழக்குகள் போடப்பட்டன

இதற்கிடையே, கடந்த 2014-ம் ஆண்டு நடந்த கூட்டம் ஒன்றில் பாலஸ்தீன விடுதலை குறித்தும் தமிழீழ விடுதலைக் குறித்தும் பேசியதற்காக, அவர் மீது UAPA (சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம்) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசயமாக ஆகஸ்ட் 31 ந்தேதி சென்னை எழும்பூர் கோர்ட்டில் திருமுருகன் காந்தியை போலீசார் இன்று ஆஜர்படுத்தினர்.

அப்போது, அவர் மீது UAPA வழக்கு போடப்பட்டதில் உள்ள குளறுபடிகள் குறித்தும், அது பொருந்தாத வழக்கு என்றும் திருமுருகன் காந்தியை UAPA (சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம்) கீழ் நீதிமன்றகாவலில் வைக்கமுடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.அரசு தரப்பில் வாதங்களை வைக்க அரசுதரப்பு வழக்குரைஞர் வராததால் மறுநாள் இந்த வழக்கை எடுப்பதாக நீதிபதி கூறினார்.

மறுநாள் செப்டம்பர் 1 ந்தேதி மீண்டும் திருமுருகன்காந்தி வழக்குக்காக வேலூரில் இருந்து அழைத்து வரப்பட்டார்

அவர் சார்பாக சீனியர் வழக்குரைஞர் N.R இளங்கோவன் முப்பது நிமிடத்திற்கும் மேலாக இந்த வழக்கு UAPA (சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம்) கீழ் எப்படி பொருந்தாது என்று பல ஆவணங்கள் சமர்ப்பித்து எடுத்துரைத்தார்

பின்னர் அரசு வழக்கறிஞர் வந்து, காவல்துறை ஆணையரிடம் அறிக்கை பெறுவதற்கு 10 நாட்கள் கால அவகாசம் தேவை என்று தெரிவித்தார்.

இந்நிலையில் உடனடியாக UAPA வழக்கில் ரிமாண்ட் செய்ய மறுத்த நீதிபதி, அறிக்கையைப் பெறுவதற்கு கால அவகாசம் அளித்து, விசரணையை செப்டம்பர் 14ம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தார்.

14ம் தேதி அரசு தரப்பில் வாதிட்டார்கள். வாதங்கள் முடிவுற்ற நிலையில் நீதிபதி 17 ந்தேதிக்கு தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார்.

17 ந்தேதி திங்கட்கிழமை இன்று நீதிபதி இருதரப்பு வாதங்களின் அடிப்படையில் திருமுருகன்காந்தி மீது போடப்பட்ட UAPA வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

பிறகு போலீஸ் தரப்பில் வழக்கு IPC பிரிவு 505(1)(b)-ல் வழக்கு பதியப்பட்டது,உடனடியாக திருமுருகன் காந்தி தரப்பில் பிணை மனுவும் போடப்பட்டது அது வருகிற 19 ந்தேதி விசாரணைக்கு வருகிறது .


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top