நீதித்துறை அவமதிப்பு; எச்.ராஜா மீது தாமாக முன்வந்து ஐகோர்ட் நீதிபதிகள் விசாரணை

‘ஹைகோர்ட் மயிருக்கு சமம்’ என்று நீதித்துறை குறித்து அவதூறாக பேசிய பாஜக தலைவர் எச்.ராஜா மீது தாமாக முன் வந்து சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சி.டி. செல்வம், நிர்மல் குமார் ஆகியோர் அமர்வு இன்று விசாரணை நடத்தியது.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் போலீசாருடன் ஏற்பட்ட தகராற்றில் பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா, சென்னை ஐகோர்ட்டையும், காவல்துறையும் குறித்து கீழ்தரமாக விமர்சித்திருந்தார்.மற்றும் ‘டிஜிபி’ வீட்டில் நடந்த குட்கா ஊழல் சிபிஐ விசாரணை குறித்தும் அவதூறாக பேசியிருந்தார்.அவருடைய பேச்சு அதிகார திமிரின் மொத்த வடிவமாக இருந்தது இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, அவர் மீது 8 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ் அமர்வில் சில வழக்கறிஞர்கள் எச்.ராஜா குறித்து முறையிட்டனர். ஆனால், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதால் தாமாக முன்வந்து விசாரிக்க தேவையில்லை என நீதிபதிகள் மறுத்தனர்.

இதனை அடுத்து, நீதிபதிகள் சி.டி. செல்வம், நிர்மல் குமார் அமர்வு இவ்விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கினார்கள். எச்.ராஜா அக்டோபர் 22-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள் கருத்து கூறுகையில்,

“நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்துவதை அனுமதித்தால் பாசிசம், நக்சலிசம் வளர்ந்து விடும். நீதித்துறையின் கண்ணியத்தை காப்பது நீதிபதிகளின் தலையாய கடமை. அரசும் காவல்துறையும் போகிற போக்கில் இதனை மறப்போம், மன்னிப்போம் என மறந்து விடுவார்கள். என தெரிவித்தனர்.

எச்.ராஜா மீது கைது நடவடிக்கை எடுக்காமல் வெறும் விசாரணை மட்டும் எடுத்திருப்பது உயர்நீதிமன்றமே பாஜகா வின் அழுத்தத்திற்கு ஆட்பட்டிருக்கிறது என்பதை காட்டுகிறது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top