2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யும்;மீனவர்களுக்கு எச்சரிக்கை

மத்திய வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். ஆகையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்யும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

அடுத்த இரு தினங்களுக்கு வட தமிழகத்தில் அனேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 3 தினங்களுக்கு மத்திய வங்கக்கடல் மற்றும் ஆந்திர கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்யும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று கூறினார்.

நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தஞ்சாவூரில் 11 செமீ மழை பதிவாகியுள்ளது. அடுத்து வரும் தினங்களைப் பொறுத்தவரையில் வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

ஜூன் 1 முதல் இன்று வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 229 மிமீ மழை பதிவாகியுள்ளது. இந்தக் காலகட்டத்தின் இயல்பு அளவு 262 மிமீ. இயல்பை விட 13 சதவீதம் குறைவு” எனத் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top